ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வருடாந்த மாநாடு நாளை!

Date:

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடும் புதிய நிர்வாக தெரிவும் நாளை 27ஆம் திகதி மு.ப.9.00 மணிக்கு கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

மீடியா போரத்தின் தலை­வரும் சிரேஷ்ட ஊட­க­வி­ய­லா­ள­ரு­மான கலா­பூ­ஷணம் என். எம் அமீன் தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள இந்த மாநாட்டில் சுகா­தார மற்றும் வெகு­ஜன ஊட­கத்­துறை அமைச்­சரும், அமைச்­ச­ரவை பேச்­சா­ள­ரு­மான டாக்டர் நலிந்த ஜய­திஸ்ஸ பிர­தம அதி­தி­யா­கவும், இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்­தானி கௌரவ அதி­தி­யா­கவும் முக்­கி­யஸ்­தர்கள் பலர் சிறப்பு அதி­தி­க­ளா­கவும் கலந்து சிறப்­பிக்­க­வுள்­ளனர்.

இந்த மாநாட்டின் போது முஸ்லிம் மீடியா போரத்தின் நடப்பு ஆண்டுக்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவும் இடம் பெறவுள்ளது.

இதேவேளை பேராசிரியர் எம்.எச் ஜவஹருல்லா எம்.எல்.ஏ (தமிழ்நாடு – இந்தியா) எழுதிய செய்ன் ஃபாசில் மொழிபெயர்த்த ‘நபிதுமாங்கே சமாஜ சபந்ததா'(‘Nabithumange Samaaja Sabandatha’) புத்தக வெளியீடும் இடம்பெறவுள்ளது.

புத்தக விமர்சனத்தை களனிப் பல்கலைக்கழக சமூக அறிவியல் பீட வரலாற்றுத் துறைத் தலைவர் கல்கந்தே தம்மானந்த தேரர் நிகழ்த்தவுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...