கொலம்பியா ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

Date:

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து செய்யப்போவதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் வன்முறைகளைத் தொடர்ந்து எதிர்த்து வரும் கொலம்பியா அரசு, கடந்த 2024 ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் தனது உறவுகளை முறித்துக்கொண்டது. மேலும், இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்து வருவதாக கொலம்பிய அதிபர் குஸ்தாவோ பெட்ரோவும் குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க அதிபர் குஸ்தாவோ நியூயார்க் சென்றுள்ளார்.

ஐ.நா. அவையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வருகையின்போது, நியூயார்க்கில் அவருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவும் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய, ஜனாதிபதி குஸ்தாவோ, காஸாவில் நடைபெறுவது இனப்படுகொலை எனவும், அமெரிக்க இராணுவ வீரர்கள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுகளுக்கு ஒத்துழைக்கக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நியூயார்க் தெருவில் நின்று கொண்டு அமெரிக்க வீரர்கள் கட்டளைகளுக்கு ஒத்துழைக்கக் கூடாது எனக் கூறி கொலம்பியா ஜனாதிபதி வன்முறையைத் தூண்டியதாகவும், அதனால், அவரது விசாவை ரத்து செய்யப்போவதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி, கொலம்பியா உள் துறை அமைச்சகம் கூறியதாவது:

“பலஸ்தீனுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலையைக் குறித்து ஐ.நா. அவையில் தைரியமாகப் பேசிய சில அதிபர்களில் குஸ்தாவோவும் ஒருவர். அதனால், அவரது விசாவை ரத்து செய்கின்றனர்” எனக் கூறியுள்ளது.

 

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...