பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் இடியுடன் மழை

Date:

இன்று (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்கும் பின்னர்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, மொணராகலை, அம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களில் வெப்பக் குறியீடு, மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலான ககரையோரப் பகுதிகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள பெரும்பாலான கடற்பரப்புகளும் சாதாரண நிலை முதல் ஓரளவு கொந்தளிப்பு வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக் கூடும் என்பதோடு, அப்பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

Popular

More like this
Related

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...

வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை

தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை...

இறைவரித் திணைக்களம் வரலாற்றில் மிக உயர்ந்த வரி வருவாய் வசூலை அடைந்தது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த ஆண்டு அதன் வரலாற்றில் மிக...

திருகோணமலை பௌத்த சிலை விவகாரம்: தர்ம சக்தி அமைப்பினர் நேரில் ஆய்வு

திருகோணமலையில் ஏற்பட்டுள்ள பௌத்த சிலை தொடர்பான சர்ச்சை குறித்து உண்மை நிலையை...