டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

Date:

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்த நிபந்தனைகளை ஏற்பதாக ஹமாஸ் அறிவித்திருக்கிறது.

காசா போர் முடிவுக்கு வருவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த திட்டத்தின் சில அம்சங்களை ஏற்க ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேலிய கைதிகளை விடுவிப்பது மற்றும் காசா நிர்வாகத்தை ஒப்படைப்பது போன்ற சில முக்கிய நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்றுக்கொண்டது. இருப்பினும், இத்திட்டத்தின் பல அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “டிரம்ப் தனது 20 அம்ச திட்டத்தை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ ஞாயிற்றுக்கிழமை வரை ஹமாஸுக்கு கால அவகாசம் அளித்திருந்தார். இதற்கு ஹமாஸ் தனது பதிலை வழங்கியுள்ளது. ஆனால், ஹமாஸ் கோருவது போல, மற்ற நிபந்தனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுமா? என்பது குறித்து டிரம்ப் இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை.

குறிப்பிடத்தக்க வகையில், ஆயுதங்களை கைவிட வேண்டும் என்ற இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நிபந்தனை குறித்து எந்த கருத்தையும் ஹமாஸ் தெரிவிக்கவில்லை. இந்த நிபந்தனையை ஹமாஸ் முன்னதாகவே நிராகரித்திருந்தது. காசா மீதான போர் நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம், உடனடி உதவிப் பொருட்கள் விநியோகம் போன்றவற்றை டிரம்ப் முன்மொழிந்திருந்தார்.

காசா மீதான போரை முடிவுக்கு கொண்டுவரவும், கைதிகள் பரிமாற்றம் செய்யவும், உடனடி உதவி வழங்கவும் அரபு, இஸ்லாமிய மற்றும் சர்வதேச நாடுகள் மற்றும்  டொனால்ட் டிரம்ப் எடுத்து வரும் முயற்சிகளை ஹமாஸ் பாராட்டுகிறது என்று ஹமாஸ் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது” என ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது.

Popular

More like this
Related

தொடரும் ‘Newsnow’இன் மனிதாபிமானப் பணிகள்: தெல்தோட்டை மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி வைப்பு

கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் டிட்வா புயல், முழு நாட்டையும் உலுக்கி பெரும்...

தனியார் துறையினருக்கான சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிப்பு!

2026 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின்...

போதைப்பொருள் குறித்த தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

2026 ஆம் ஆண்டில் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படவுள்ள போதைப்பொருள் ஒழிப்புச் சுற்றிவளைப்புகளுக்காக,...

பஸ்கள் தரிப்பிடங்களுக்கு வரும் நேரங்களை அறிந்துகொள்ள புதிய செயலி

தென் மாகாணத்தில் பயணிகள் பஸ்கள் தரிப்பிடங்களுக்கு வரும் நேரங்களை அறிந்துகொள்வதற்கு புதிய...