ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில் கடந்த 3ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றது.
சீனங்கோட்டை பள்ளிச் சங்கத்தின் கௌரவத் தலைவர் அல்ஹாஜ் முக்தார் தலைமையில், China Fort Knowledge Forum மற்றும் Manarath Ladies Forum இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்தன.
இந்நிகழ்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. பெண்களுக்கான முதல் அமர்வில், அஷ்ஷெய்க் அனஸ் முஹம்மத் அவர்கள் “பெண் ஆளுமை உருவாக்கத்தில் இறைத்தூதர் (ஸல்)” என்ற தலைப்பில் பயனுள்ள உரையாற்றினார்.
இரண்டாம் பகுதி ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில்:
-
“அல்குர்ஆனிய வாழ்வைச் சுமந்த இறைத்தூதர் (ஸல்)” என்ற நூலுக்கான ஆய்வுரையை அஷ்ஷெய்க் நவாஸ் ஸனூர்தீன் அவர்கள் தனித்துவமான கோணத்தில் வழங்கினார்.
-
பிரதம அதிதியாக கலந்து கொண்ட மலேஷியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி தாவூத் அப்துல் மலிக் ஹிதாபி, “நபி (ஸல்) அவர்களின் ஸீராவை மீள்வாசிப்புச் செய்தல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
-
கௌரவ அதிதி கலாநிதி அஸ்வர் அஸாஹிம், “முஸ்லிமல்லாத ஆய்வாளர்களின் பார்வையில் இறைத்தூதர் (ஸல்)” என்ற தலைப்பில் மதிப்புமிக்க கருத்துகளை பகிர்ந்தார்.
-
சிறப்பதிதியாக கலந்து கொண்ட உஸ்தாத் மன்ஸூர், “மாற்று மத சகோதரர்களுடன் இறைத்தூதர் (ஸல்)” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்த விழாவில் உலமாக்கள், புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 1100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த China Fort Knowledge Forum தலைவர் அஷ்ஷெய்க் மக்கி மன்ஸூர், Manarath Ladies Forum தலைவர் சகோதரி நஸீலா மஷுர் மில்ஹான் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் பாராட்டப்பட்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்டு பங்களித்த பிரதம அதிதி, கௌரவ அதிதிகள், சொற்பொழிவாளர்கள், ஆய்வாளர்கள், மற்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உழைப்பாலும் ஆதரவாலும் பங்களித்த அனைவருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிகழ்வின் வெற்றிக்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய ஹுமைஸரா வகுப்புத் தோழர்கள் குறிப்பாக நினைவுகூரப்பட்டனர்.






