2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்தம் செய்யப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்ளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk க்குச் சென்று, பரீட்சை எண் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளிடுவதன் மூலம் முடிவுகளைப் பார்வையிடலாம்.
மீள் திருத்த முடிவுகளின் அடிப்படையில் 2025 க.பொ.த. (சா.த.) தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இன்று (09) நள்ளிரவு 12.00 மணி வரை ஒன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
மேலும், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்றும் பரீட்சைத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
இந்தப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பின்வரும் இலக்கங்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
துரித எண்- 1911, தொலைபேசி எண்- 0112784208, 0112784537, 0112785922, தொலைநகல் எண் – 0112784422.