எலிக்காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் வடமத்திய மாகாணத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறித்த மாகாணத்தில் 600 முதல் 700க்கு இடைப்பட்டளவில் எலிக்காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் பதிவாகியுள்ளனர்.
ஒரு வருடகாலத்தில் இதனை நூற்றுக்கு 5 வீதமாக குறைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
எலிக்காய்ச்சலினால் இந்த வருடம் அநுராதபுரம் மாவட்டத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு எலிக்காய்ச்சலினால், 743 நோயாளர்கள் பதிவாகியதாகவும் அவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.