திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் பதவியை வலுப்படுத்தி நீதவான் நீதிமன்றங்களை மேலும் சுமைப்படுத்துவதைத் தவிர்க்குமாறு தேசிய ஷூரா சபை வேண்டுகோள்

Date:

இலங்கையிலுள்ள முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் உயர்மட்ட அமைப்பான தேசிய ஷூரா சபை (NSC), தற்போது நடைமுறையில் உள்ள திடீர் மரணங்கள் குறித்து திடீர் மரண விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் மரண விசாரணைகளை நீதித்துறைக்கு சுமத்தி, ஏற்கனவே நெருக்கடியான பணிச்சுமையில் உள்ள நீதவான்   நீதிமன்றங்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கவேண்டாம் என நீதியமைச்சர் ஹர்ஷ நானாயக்காரவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 370(3) இன் கீழ்,  குற்றவியல் உட்பட குற்றம் கவனக்குறைவு பற்றிய நியாயமான சந்தேகம் உள்ள சந்தர்ப்பங்களில் மாத்திரம் நீதவான் நீதிமன்றங்களை மரண விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை தொடர வேண்டும் எனவும் திடீர் மரண விசாரணை அதிகாரிகளாளின் பணிச்சுமையை நீதவான் நீதிமன்றங்களின் மீது திணிக்க வேண்டாம் என தேசிய ஷூரா சபை தெளிவுபடுத்தியுள்ளது.

சட்டத்தை மக்கள் இலகுவானதாகவும், பொதுமக்களுக்கு செலவு குறைந்ததாகவும், நீண்டகால சட்ட தாமதங்களைக் குறைப்பதான நீதி அமைச்சின் முயற்சிகளை வரவேற்பதாக 2025 அக்டோபர் 5ஆம் தேதியிட்ட அமைச்சருக்கான தேசிய ஷூரா சபையின் கடிதம் குறிப்பிடுகிறது.

இருப்பினும், பரிந்துரைக்கப்படவிருக்கும் சில புதிய திட்டங்கள் சட்ட தாமதங்களுக்கு மேலும் வழிவகுக்கும் என்றும், அத்துடன் நீதிமன்றங்கள் மூலமான பிரேத விடுவிப்பு நடைமுறையானது துயரத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

99% திடீர் மரணங்கல் இயல்பான மரணங்களாகவே கடந்தகால புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

எனவே, சந்தேகிக்குபடும்படியான 1%க்கும் குறைவான மரணங்களின் விதிவிலக்கான வழக்குகளுக்கு மாத்திரமே தேவைப்படும் நீதவான் நீதிமன்ற விசாரணைகள் மற்றும் பிரேதப் பரிசோதனைகள்(Post Mortems) இந்த 99% ஆனவர்களும் உட்படுத்தப்படுவது நியாயமற்றது.

மேலும் இவ்வாறான புதிய சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ள இலகுவான நடைமுறைமையை விட  மேலும் கடினமாக்குவதுடன் துயரத்தில் உள்ள குடும்பங்களை மேலும் சிரமம்படுதுகின்றது.

குறிப்பாக முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்க செயற்பாடுகளில் மேலும் பதிப்படையச்செய்யும் என தேசிய ஷூரா சபை கவலையை தெரிவித்துள்ளது.

பிரேதப் பரிசோதனைகள் அரசாங்கத்திற்கு அதிகபட்ச கூடுதல் நிதியைச் செலவழிக்கின்றன, அத்துடன் துயரத்திலுள்ள குடும்பங்களுக்கும் கூடுதல் செலவுகளை ஏற்படுத்துகின்றன.

இறந்த மனித உடல்களுக்கும் சர்வதேச சட்டங்கள் மற்றும் வழக்கமான மத நடைமுறைகளின் கீழ் மரியாதை மற்றும் கண்ணியம் அவசியம்.

எல்லா மதங்களும் இறந்தவர்களுக்கு கண்ணியமான இறுதிச் சடங்குகளை வலியுறுத்துகின்றன.

எனவே, அரசாங்கம் நீதவான் நீதிமன்றங்களை மேலும் சுமைப்படுத்தாமல், மாறாக திடீர் மரண விசாரணை அதிகாரிகளை தொழிலாளர் பிணக்குகள் சபையின் ஆணையளர்ககுளுக்கு இணையான வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும்.

அத்துடன், புதிய நியமனங்களுக்கு நியாயமான ஊதியத்துடன் கூடிய கல்வித் தகமைகளை கொண்டவர்வர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

அரசாங்கத்தின் வாக்குறுதிக்கேற்ப, தற்போதுள்ள சட்டங்களில் மாற்றங்கள் சட்ட தாமதங்களைக் குறைத்து, செயல்முறையைச் செலவு குறைந்ததாகவும், திடீர் மரண விசாரணை அதிகாரிகளை அமைப்பை மக்கள் நம்பக்கூடியதாக மாற்ற வேண்டும் என்று தேசிய ஷூரா சபையின் தலைவர் எம்.எம். ஸுஹைர் ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பொதுச் செயலாளர் ரஷீத் எம். இம்தியாஸ் (சட்டத்தரணி) ஆகியோர் இணைந்து வெளியிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் அடுத்த ஆண்டில்!

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளிவிவகார அமைச்சர்...

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை கைப்பற்ற முயற்சி: பாகிஸ்தான் உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பு

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் கைப்பற்றக் கோரும்...

2026 தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றிக்கை

2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான முறைப்படி வகுப்புக்களை...

‘ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாகக் கூறும் செய்தி உண்மைக்குப் புறம்பானது’: பொலிஸ் ஊடகப் பிரிவு விளக்கம்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு முக்கியமாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தியா இதற்குப் பின்னால்...