உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர் 7, 2023 அன்று தொடங்கவில்லை.
அதன் வேர் வரலாற்றில் ஆழமாக ஊன்றிய ஒரு நெருக்கடியிலேயே உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கு தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட மேற்கொண்ட சதிகளால் இது பல தசாப்தங்களாக நீடித்த ஒரு கடுமையான போராக மாறியுள்ளது.
அதனால் தான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தங்கள் மேலாதிக்க இலக்குகளுக்கு சாதகமாக முன்வைத்த அனைத்து யோசனைகளும் ஹமாஸ் அமைப்பினால் புறக்கணிக்கப்பட்டு தோல்வியடைந்தது மேற்படி சதிகாரக் கும்பல் இந்த நெருக்கடியை தனக்கு சாதகமாக முடிவுக்குக் கொண்டுவர தொடர்ந்தும் எண்ணினால், வரலாறு நிச்சயமாக மீண்டும் மீண்டும் நிகழவே செய்யும்.
எவ்வாறிருந்த போதிலும், இஸ்ரேலின் மிருகத்தனமான இராணுவ நடவடிக்கைகளுக்கு உலகளாவிய எதிர்ப்பு முதல் முறையாக ஏகமனதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளமை நல்ல அடையாளமே.
இதேவேளை, இஸ்ரேலின் ‘கிரைம் மினிஸ்டர்’ பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் டிரம்ப் இடையே வெள்ளை மாளிகையில் சமீபத்தில் நடந்த சந்திப்பின் போது, டிரம்பின் மத்திய கிழக்கு அமைதித் திட்டம் ‘3,000 ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக’ வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தனர்.
பல நூற்றாண்டுகளாக இஸ்லாத்திற்கு எதிரான சிலுவைப் போர் தோல்வியடைந்து, ஐரோப்பாவிற்கு பெரும் அழிவைக் கொண்டு வந்தது போல, டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் மத்திய கிழக்கு இலக்குகள் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தின.
டிரம்பின் முயற்சிகள் வழக்கம் போல், இஸ்ரேலை வலுப்படுத்தி, பிராந்தியத்தில் முழுமையான ஏகபோகவாதியாக அதை நிலைநிறுத்தும் விதத்திலேயே அமைந்தமையே இதற்கான காரணம்.
அமெரிக்காவிற்கு ஜனாதிபதியாக பதவி ஏற்கும் டிரம்ப் போன்றவர்களின் இந்த ஆணவ அணுகுமுறையே அக்டோபர் 7, 2023 நிகழ்வுகளுக்கு நேரடி காரணமாகும்.
பல வருட பேச்சுவார்த்தைகள், சர்வதேச திட்டங்கள் மற்றும் இரு-நாடு தீர்வுக்கான முடிவற்ற மீறப்பட்ட வாக்குறுதிகளால் வலுப்படுத்தப்பட்ட காலனித்துவத்திற்கு எதிரான பாலஸ்தீன மக்களின் நீண்ட போராட்டம் தற்போது மேலும் வலுவடைந்துள்ளது.
அந்த காலத்தில் கற்களை எரிதல் மற்றும் கூச்சல்களால் மேற்கொள்ளப்பட்ட யூத இராணுவத்தின் மீதான எதிர்ப்பு, இப்போது ஹைப்பர்சோனிக் மற்றும் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை நடத்தும் அளவிற்கு தீவிரமடைந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர் 7, 2023 அன்று, ஹமாஸ் போராளிகள் அமைப்பால் தொடங்கப்பட்ட ‘அல்-அக்ஸா வெள்ளம்’ அமெரிக்க உட்பட்ட சதிகாரர்களின் திட்டங்களை ஒருபோதும் ஏற்க முடியாது என்பதற்கான ஒரு அறிக்கையேயாகும்.
ஒரு நியாயமான தீர்வை வழங்காமல், இனப்படுகொலை மூலம் இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று நினைத்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கும்பல் இன்று திருடனுக்கு தேள் கொட்டியது போல திணறுகின்றது.
பாலஸ்தீனியர்களை ஒழிப்பது இவ்வளவு கடினம் அல்லது முற்றிலும் சாத்தியமற்றது என்று இந்தக் கொடுமைக்காரர்கள் ஒருபோதும் நினைக்கவில்லை.
இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் காசாவில் மோதல், ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட சுமார் 100,000 பாலஸ்தீன பொதுமக்களைக் கொன்றுள்ளது.
உலகில் அதிக எண்ணிக்கையிலான உடல் ஊனமுற்ற சிறாரர்கள் இருக்கும் இடமாக இன்று காசா பகுதி மாறியுள்ளது. இது முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் உடல் ஊனமுற்றவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.
இந்த இரண்டு ஆண்டுகளில் காஸாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையும் அவ்விரண்டு உலகப் போர்களில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.
இவ்வாறு, பிராந்திய பிரச்சினையாக இருந்த பாலஸ்தீன நெருக்கடி, சர்வதேச சமூகத்தால் இனியும் சகித்துக்கொண்டு இருக்க முடியாத ஒரு உலகளாவிய நெருக்கடியாக மாறியுள்ளது.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சதிகாரர்கள், யூதர்களுடன் சேர்ந்து, பாலஸ்தீன மக்களின் இறையாண்மை கொண்ட அரசுக்கான விருப்பத்தை ஒழிப்பதில் அவர்கள் நினைத்தது போல் வெற்றிபெறப் போவதில்லை என்பது தெளிவாகி விட்டது.
அதற்கு பதிலாக, இந்த பிரச்சினை இஸ்ரேலை உலகத்தில்து தனிமைப்படுத்தியுள்ளது, யூதர்களின் உண்மையான கொடூர முகத்தை உலகிற்கு அது அம்பலப்படுத்தியுள்ளது, மேலும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அதன் பிம்பத்தை சிதைத்துள்ளது.
அது மட்டுமன்றி, எவராலும் வெல்லவே முடியாது என்று கருதப்பட்ட இஸ்ரேலின் ஆணவம் மண்ணைக்கவ்வியுள்ளது. அதன் பொருளாதாரமும் படுகுழியில் விழுந்துள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நீதிமன்றம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் போன்ற அமைப்புக்கள் மீதான உலகளாவிய நம்பிக்கையும் வீழ்ந்துள்ளது.
மூன்றாம் உலகில் உள்ள ஏதாவது ஒரு நாட்டில் ஒரு சிறிய போர்க்குற்றம் நடந்தவுடன், ஐ.நா. துருப்புக்கள் அங்கு உடனே நுழைந்து குற்றம் சாட்டப்பட்ட தலைவர்களைக் கைது செய்தாலும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொன்று வரும் நெதன்யாகு போன்ற கொலையாளிகள் பாதுகாப்பாகவே உள்ளனர்.
அமைதிக்கான நோபல் பரிசை வெல்லும் பேராசையால் பீடிக்கப்பட்டுள்ள, டிரம்ப் அவசரமாக ஒரு அமைதித் திட்டத்தைத் தயாரித்து ஹமாஸிடம் வழங்கினார், ஆனால் ஹமாஸ் அதை அலட்சியமாக ஒதுக்கி விட்டது.
இதனால் டிரம்ப் கோபமடைந்து காசா மீது முன்னெப்போதும் இல்லாத அழிவை ஏற்படுத்துவதாக அச்சுறுத்தியுள்ளார்.
உண்மையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் பாலஸ்தீனியர்கள் ‘முன்னெப்போதும் இல்லாத அழிவைச்’ சந்தித்து பழக்கப்பட்டு விட்டதால், டிரம்பின் கோபம் ஹமாஸை சிறிதும் அச்சம் கொள்ளச் செய்யவில்லை.
டிரம்பின் புதிய திட்டம் பாலஸ்தீன மக்களின் உரிமைகளை முற்றிலுமாகப் பறிக்கும் விதத்திலேயே உள்ளன. அது வெற்றி பெற்றால், மீண்டும் இஸ்ரேல் இந்த பிராந்தியத்தின் ஒரே தாதாவாக மறுபடியும் ஆவது நிச்சயம்.
இது ஹமாசுடனான மோதல்களை அதிகரிக்கவே செய்யும். ஒருவேளை தற்போதையதை விட ஆபத்தானதாகவும் கோரமானதாகவும் ஆகலாம்.
அரபு மற்றும் இஸ்லாமிய உலகம் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் நெதன்யாகு மற்றும் டிரம்பின் சதித் திட்டங்களுடன் உடன்படுவது அரசியல் தற்கொலை என்பதையும் அவர்கள் புரிந்து கொள்வது நல்லது.