கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

Date:

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எனக்கு சொந்தமானது என சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும்.

அந்த கட்டிடம் குறித்து நேற்று திங்கட்கிழமை (13) தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் குறிப்பிடும் போது அதில் எனது பெயரை மீண்டும் பயன்படுத்தியுள்ளனர்.

அந்த கட்டிடம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து நான் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலமும் வழங்கி உள்ளேன்.

அந்த கட்டிடத்திற்கு மின்சார இணைப்பு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் ஜி ராஜபக்ஷ என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆவணத்தில் எனது கையொப்பம் இல்லை. அந்த ஆவணத்தில் உள்ள எழுத்துக்களும் தெளிவற்று காணப்படுகிறது.

எனவே கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எனக்கு சொந்தமானது அல்ல என நான் உறுதியாக கூறுகின்றேன். என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு தலா ரூ. 25000!

மோசமான காலநிலை காரணமாக பேரிடருக்கு உள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு...

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்காக 35 மில்லியன் டொலர்களை திரட்டும் ஐ.நா!

இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன்...

கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ‘ஓட்டிசம்’ அலகை மேம்படுத்த ரூ. 398.09 மில்லியன் ஒதுக்கீடு!

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் முழுமையான வசதிகளுடனான மனவளர்ச்சி குன்றிய...

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி அலிஸன் ஹூக்கர் இலங்கை வருகை!

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் அலிசன் ஹூக்கர், உத்தியோகபூர்வ...