பல அமைச்சுக்களின் பொறுப்புக்கள், செயல்பாடுகள், துறைகள், சட்டரீதியான அமைப்புகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களை திருத்தி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த சிவில் பாதுகாப்புத் துறையும், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் கீழ் இருந்த மறுவாழ்வுப் பணியகமும் நீக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் அண்மைய அமைச்சரவை மறுசீரமைப்பைத் தொடர்ந்து அமைச்சுகளின் பொறுப்புக்கள் மற்றும் செயற்பாடுகள், துறைகள், சட்டரீதியான அமைப்புகள் என்பன திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.