பாகிஸ்தான் தனது அரசியல் எதிராளிகளை பயங்கரவாதிகள் என வர்ணிக்கிறது.
அதேவேளை சர்வதேச மட்டத்தில் பயங்கரவாதம் என்பதற்கான மிகச்சரியான வரையறை இதுவரை ஏகோபித்த கருத்தாக இல்லாமலேயே இருக்கிறது.
எமது அரசானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நாட்டுக்கும் எதிராகவும் ஆயுதக்குழுக்களை உருவாக்கும் கொள்கைகளை கொண்டதல்ல என்பதை வலியுறுத்தி கூறுகிறோம் என அல்ஜஸிராவுக்கு வழங்கிய நேர்காணலில் ஆப்கான் பாதுகாப்பு அமைச்சர் முல்லா முகமது யாகூப் முஜாஹித் தெரிவித்துள்ளார்.