போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் உயர் அதிகாரிகள்: குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை

Date:

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் முன்னாள் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் உயர் அதிகாரிகள் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான ஏஎஸ்பி எஃப்.யு. வுட்லர் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார்.

தவறான செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட எந்தவொரு நபரும், தகுதி அல்லது பதவியைப் பொருட்படுத்தாமல் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் உறுதிபடுத்தினார்.

கடல் வழியாக அதிக அளவில் மெத்தம்பேட்டமைன் (ICE) மற்றும் ஹாஷிஷ் கடத்தப்படுவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டது.

முன்னாள் சிரேஷ்ட போதைப்பொருள் அதிகாரிகள் இந்த சட்டவிரோத பொருட்களை கொண்டு செல்வதற்கு உதவியதாக ஒரு நபர் குற்றம் சாட்டியதாக சமூக ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

Popular

More like this
Related

மீண்டும் வழமைக்குத் திரும்பும் ரயில் சேவைகள்!

திட்வா புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு...

இஸ்லாமிய இலக்கியம்: அரபு எண்களின் தோற்றமும் பரவலும்!

-பொறியாளர் எஸ்.எம்.எம். ரிஃபாய் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எண்கள் தவிர்க்க முடியாதவை....

போதைப்பொருள் பாவனையாளர்களைக் கண்டறிய இன்று முதல் புதிய முறை!

போதைப்பொருள் பயன்படுத்தும் சாரதிகளைக் கண்டறியும் உமிழ்நீர் பரிசோதனை இன்று (17) முதல்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை.

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும்...