விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது

Date:

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா இன்று (23) வியாழக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான தம்மிக்க பட்டபெந்தி, சுனில் ஹந்துன்னெத்தி, சுற்றாடல் பிரதி அமைச்சர் அண்டன் ஜயகொடி மற்றும் சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சுயாதீன ஊடகவியலாளராக தமிழன் பத்திரிகையில் இவர் தொடர்ச்சியாக எழுதி வருகின்ற சுற்றாடல் கட்டுரைகளுக்காகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் கடந்த வருடமும் ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு ஜனாதிபதி சுற்றாடல் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...