அஸ்வெசும வங்கி கணக்கை திறக்காதவர்களுக்கான அறிவிப்பு

Date:

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் பெயர்கள் பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகள் இன்னும் இருப்பதாக நலன்புரி நன்மைகள் சபை கூறுகிறது

இதுவரை வங்கிக் கணக்கு திறக்காத பயனாளிகள், தமது பிரதேச செயலகத்திற்குச் சென்று வங்கிக் கணக்குகளைத் திறப்பது தொடர்பான கடிதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அந்தக் கடிதத்தை மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி அல்லது பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றில் தமக்கு வசதியான வங்கிக் கிளையொன்றில் சமர்ப்பித்து, ‘அஸ்வெசும’ பயனாளி வங்கிக் கணக்கொன்றை திறக்க வேண்டும் எனவும் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்காத, ‘அஸ்வெசும’ இரண்டாம் கட்டத்திற்கு தகுதிபெற்ற பயனாளிகள், விரைவில் இந்த வங்கிக் கணக்குகளைத் திறந்து, குறித்த வங்கிக் கணக்கு விபரங்களை பிரதேச செயலகங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அந்த அறிவித்தல் மூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று!

போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு ...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 4.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (30) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில்...

இலங்கை குழந்தைகளுக்கு உணவளிக்க 2.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குகிறார் மைக்கேல் கோர்ஸ்.

உணவுத் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக, உலகளாவிய ஆடை வடிவமைப்பு நிறுவனமான மைக்கேல்...