இலங்கையின் முதியோர் தொகை 18% ஆக அதிகரிப்பு!

Date:

2012 ஆம் ஆண்டில், இலங்கையின் முதியோர் மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 12% ஆக இருந்ததாகவும், 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18% ஆக அதிகரித்துள்ளதாகவும் ஆலோசகர் சமூக வைத்தியர் நிஷானி உபேசேகர தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர்,

2012 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மக்கள் தொகையில் 12% பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்.

2024 மக்கள் தொகை கணக்கெடுப்பில், இது 18% ஆக உயர்ந்துள்ளது.

2040 ஆம் ஆண்டுக்குள், மக்கள் தொகையில் 25% – அதாவது, ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் – முதியவர்களாக இருப்பார்கள் என்று நாங்கள் கணித்துள்ளோம்.

ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, ​​இலங்கை அதன் முதியோர் மக்கள்தொகையில் அதிக வளர்ச்சி விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலைமை முக்கியமாக பிறக்கும் போது ஆயுட்காலம் அதிகரிப்பதாலும் பிறப்பு விகிதங்கள் குறைவதாலும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

GovPay ஊடாக ரூ. 568 மில்லியனுக்கும் அதிகமான நிதிப் பரிவர்த்தனைகள்

இலங்கை அரசாங்கத்தின் சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டணங்களைச் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான மற்றும்...

போதைப்பொருள் நாட்டைச் சூழ்ந்துள்ள ஒரு மாயாஜாலப் பேரழிவு: ஜனாதிபதி அநுரகுமார

போதைப்பொருளுக்கு எதிரான 'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயற்பாடு ஜனாதிபதி அநுரகுமார...

வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்ட துருக்கியின் 102 ஆவது தேசிய தினம்

கொழும்பிலுள்ள இலங்கையின் துருக்கி தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட துருக்கியின் 102 ஆவது...

மாணவர்களுக்கு புதிய போக்குவரத்து சேவைகள் அறிமுகம்

பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பாடத்திட்டங்கள் மற்றும் நீடிக்கப்பட்ட பாடவேளைகளைக் கருத்திற்கொண்டு, புதிய...