வடக்கு, கிழக்கு, வடமத்தியில் அவ்வப்போது மழை

Date:

இன்றையதினம் (21) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா, மேல், தென் மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாளை (22), தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய தாழமுக்க மண்டலமொன்று உருவாக வாய்ப்புள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்த தாழமுக்க மண்டலம் மேலும் வலுவடைந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகே நகர வாய்ப்புள்ளது.

திருகோணமலை முதல் காங்கேசன்துறை வழியாக புத்தளம் வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்குத் திசையிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை: சட்டங்களை கடுமையாக்க இலங்கை அரசு பரிசீலனை!

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, அதுதொடர்பான குற்றங்களுக்கு மரண...

குழந்தைகளுக்கென அறிமுகமாகும் போசனைத் திட்டம்

கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்த ஊட்டச்சத்து நிலையை...

லங்கா மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கத்துக்கு 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை ஒதுக்கீடு!

லங்கா மெட்ரோ டிரான்சிட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகளை...