உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

Date:

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடங்கியுள்ளது.

கொழும்பில் இன்று (25) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நளின் ஜெயதிஸ்ஸ இநத் விடயத்தை உறுதிபடுத்தினார்.

பொருளியல் பரீட்சை இடம்பெறுவதற்கு முன்னர் ஊகங்களின் அடிப்படையில் வினாக்கள் வழங்கப்பட்டதன் காரணமாக குறித்த பரீட்சையின் வினாத்தாள் கசிந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக சில ஆசிரியர் தொழிற்சங்கங்களும் ஊடகங்களுக்கு பல கருத்துக்களை வௌியிட்டிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சலாம் ரமழான் 2026: கொழும்பு கிரீன் பாத்தில் தொடங்கிய கலாசார விழா!

இலங்கையின்  முஸ்லிம் கலாசாரத் திருவிழாவான ‘சலாம் ரமழான் 2026’, மேல் மாகாண...

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...