அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் இடைநிறுத்தம்.

Date:

அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நவம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, அது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிடபட்டுள்ளது.

இதனை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக்க பண்டார அறிவித்துள்ளார்.

அதற்கமைய புதிய விடுமுறை விண்ணப்பங்கள் அல்லது விடுமுறை நீடிப்பு விண்ணப்பங்களை பொறுப்பேற்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்த வேண்டும் என அமைச்சின் செயலாளர், அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு குறித்த சுற்றறிக்கையின் மூலம் அறிவித்துள்ளார்.

சிரேஷ்டத்துவம் மற்றும் ஓய்வூதியத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிகபட்சம் 5 வருடங்களுக்கு உட்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கி, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பொது நிர்வாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய, அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின் கீழ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு விடுமுறையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்டுள்ள கால எல்லைக்கு அமைவாக மாத்திரம் அந்த விடுமுறையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதுவரையில் விடுமுறைக்கான அனுமதியைப் பெற்று, அந்த விடுமுறையைக் கழிக்கத் தயாராக இருக்கும் உத்தியோகத்தர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்டுள்ள காலப்பகுதிக்கு அமைய விடுமுறையைப் பெற்றுக்கொள்ளும் சாத்தியம் உள்ளதாக பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாட்டு விடுமுறையைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள, அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்த புதிய விடுமுறை விண்ணப்பங்கள் மற்றும் விடுமுறை நீடிப்பு விண்ணப்பங்களுக்குப் புதிய சுற்றறிக்கையினால் பாதிப்பு ஏற்படாது.

அதேவேளை தேவைகளைப் பூர்த்தி செய்யாத மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களில் குறைபாடுகள் உள்ள விடுமுறை விண்ணப்பங்கள் மீள்பரிசீலனை இன்றி நிராகரிக்கப்படும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் உள்நாட்டு விடுமுறைக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடுமுறை விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அனர்த்தங்களினால் பாதிப்புகளுக்குள்ளான சீரமைக்கப்படும் ரயில் மார்க்கம்

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளான மலைநாட்டு ரயில்...

நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு!

நீர்ப்பாசனத் திணைக்களத்தால் விசேட அறிவிப்பொன்று பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. நிலவும் அனர்த்த சூழ்நிலைகளைக் குறைக்க மற்றும்...

உலர் உணவுப் பொருட்களை வழங்கிய பிறீமா குழுமம்

பிறீமா குழுமம் (Prima Group Sri Lanka) ஆனது, அண்மையில் நாட்டில்...

இன்று பல தடவைகள் மழை பெய்யும்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று...