இந்தியா வரலாற்றில் ஒரு கருப்பு நாள்: பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் இன்று!

Date:

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

டிசம்பர் 6, 1992 ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில், 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி இந்துத்துவா கும்பலால் இடித்துத் தள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில், 2,000 பேர் கொல்லப்பட்டனர். ஆண்டுதோறும் பாபர் மசூதி தகர்க்கப்பட்ட டிசம்பர் 6-ம் தேதியை இஸ்லாமிய அமைப்புகள் துக்க தினமாகவும், கருப்பு நாளாகவும் அனுசரித்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பழமையான பாபர் மசூதியை 1992-ம் ஆண்டு இதே டிசம்பர் 6-ந் தேதி இந்துத்துவா அமைப்பினர் இடித்து தரை மட்டமாக்கினர்.

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் மிகப் பெரும் மத மோதல்கள் வெடித்து ரத்த ஆறு ஓடியது.

1528: முகலாயப் பேரரசர் பாபரின் தளபதி மிர் பாகி அயோத்தியில் பாபர் மசூதியைக் கட்டினார்.

1853: இந்து கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதாக குற்றம் சாட்டி வன்முறைகள் நிகழ்ந்தன.

1859: பாபர் மசூதி விவகாரத்தில் தலையிட்ட பிரிட்டிஷ் அரசு

  • முஸ்லிம்கள் உள்ளே தொழுகை நடத்த
  • இந்துக்கள் வெளிப்புற முற்றத்தில் வழிபட என இரண்டாகப் பிரித்தது.

1949: ராமர் சிலைகள் பாபர் மசூதி இடத்துக்குள் வைக்கப்பட்டதால் சர்ச்சைக்குரிய சொத்தாக உருமாறியது. முஸ்லிம்கள், பாபர் மசூதியில் தொழுகை நடத்துவதையும் நிறுத்தினர்.

1950,1960களில் பாபர் மசூதி தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

1984: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான குழுவை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைத்தது.

1990: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக நிறுவனத் தலைவர்களில் ஒருவரான எல்.கே. அத்வானி ரத யாத்திரை நடத்தினார்.

1992 டிசம்பர் 6: அயோத்தியில் பல நூற்றாண்டுகளாக இருந்த பாபர் மசூதியை இந்துத்துவா அமைப்பினர் இடித்து தரை மட்டமாக்கினர். இதனால் நாடு முழுவதும் இந்து- முஸ்லிம் மோதல்கள் மிகப் பெரிய அளவில் வெடித்தன.

1992: பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை விசாரிக்க லிபர்ஹான் ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது

1993: அயோத்தி பாபர் மசூதி இடிப்புக்கு பழிவாங்கும் வகையில் உலகை அதிரவைத்த மும்பை தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. பல நூறு உயிர்கள் பலியாகின.

2002: அயோத்திக்கு சென்றுவிட்டு திரும்பிய கரசேவகர்கள் பயணித்த ரயில், குஜராத்தில் தீ பிடித்து எரிந்தது. இதனையடுத்து குஜராத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது குஜராத் முதல்வராக இருந்தவர் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி.

2009: 17 ஆண்டுகால விசாரணைக்குப் பின்னர் லிபர்ஹான் ஆணையம் அறிக்கையை தாக்கல் செய்தது.

2010: அயோத்தி பாபர் மசூதி நிலத்தை இந்துக்கள்- முஸ்லிம்களுக்கு பகிர்ந்து அளிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2017: அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிட்டது.

2019: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம், இடிக்கப்பட்ட நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றது; முஸ்லிம்கள் மசூதி கட்டிக் கொள்ள வேறு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.

2020: அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது; பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து அத்வானி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.

2024: அயோத்தியில் ராமர் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

1528 ஆம் ஆண்டு முதல் அங்கே ஒரு மசூதி இருந்தது. 450 ஆண்டுகளாக அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தியுள்ளனர். 1992 இல் அது உலகின் கண்முன் ஒரே நாளில் இடித்து வீழ்த்தப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் ஒன்றில் அலகாபாத் உயர்நீதிமன்றம் இட்ட ஆணையின்படி நடத்தப்பட்ட அகழ்வாய்வு மசூதிக்கு முன் அங்கொரு கட்டுமானம் இருந்தது எனக் கூறியுள்ளது. ஆனால் அது ஒரு இராமர் கோவில் என்பதற்கு எந்த ஆதாரமும் சாட்சியமும் இல்லை. அது
ஒரு நம்பிக்கை மட்டுமே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் மாற்றம்!

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (06) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த...

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு 950 தொன் நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு.

டித்வா புயல் தாக்கத்தினால் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்காக தமிழ்...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான...

அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் இடைநிறுத்தம்.

அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன்...