குவைத் நாட்டின் தலைவர்கள் டிட்வா புயல்தாக்கத்தினால் துயரத்தில் வாடும் இலங்கை மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
இலங்கையைத் தாக்கிய டித்வா எனும் சூறாவளியால் மதிப்புமிக்க உயிர்களையும் உடமைகளையும் இழந்த செய்தி அறிந்து நாம் மிகவும் கவலையடைந்துள்ளோம், உயிர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்பவும் எமது மனமார்ந்த பிரார்த்தனைகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு குவைத் நாட்டின் அரசர், பட்டத்து இளவரசர், மற்றும் பிரதமர் இரங்கல் கடிதங்களை இலங்கை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
