ஐயாயிரம் ரூபாவை இலஞ்சமாகக் கோரிய குற்றச்சாட்டில், ஒரு பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோர் இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தனக்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, சரியான சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வருமான அனுமதிப்பத்திரம் இல்லாமை மற்றும் மதுபோதையில் இருந்தமை ஆகியவற்றை வெளிப்படுத்தி, அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க குறித்த பொலிஸ் அதிகாரிகள் 5,000 ரூபா இலஞ்சம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தியபெதும பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும், தியபெதும வாரச் சந்தைக்கு முன்புள்ள பிரதான வீதியில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
