தற்போது நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூபா 5,000/- பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கொடுப்பனவு ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும். இது 2025 நவம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தாய் சேய் நல நிலையங்களில் (Maternal Clinics) பதிவு செய்த கர்ப்பிணித் தாய்மார்களுக்குக் கொடுக்கப்படும்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உள்ள முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் (National Secretariat for Early Childhood Development) ஒரு திட்டமாக, இந்தக் கொடுப்பனவு டிசம்பர் 16 ஆம் திகதி முதல் பிரதேச செயலகங்களூடாக (Divisional Secretariat offices) மேற்கொள்ளப்படும்.
