2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 80 லட்சம் குழந்தைகள் ஆயுத மோதல்கள் மற்றும் கடுமையான காலநிலை பேரழிவுகளின் நடுவே பிறந்துள்ளதாக Save the Children அமைப்பு அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
பல தாய்மார்கள் பாதுகாப்பான மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில், கூடாரங்கள், தயாரிப்பு வசதிகள் குறைவான முகாம்கள், பேரழிவால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் இவற்றின் நடுவே குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி இந்த 80 இலட்சம் குழந்தைகளில் சுமார் 70% குழந்தைகள் சூடான், பலஸ்தீனின் காசா, மற்றும் பிற போர்நிலைகள் போன்ற பகுதிகளில் பிறந்தவர்கள்.
இப்பகுதிகளில் உணவுக் குறைபாடு, தடைசெய்யப்பட்ட உதவி பொருட்கள், சேதமடைந்த மருத்துவமனைகள், மன அழுத்தம் என பல சவால்கள் தாய்மார்களையும் புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தள்ளியுள்ளன.
2025ஆம் ஆண்டின் இந்த புள்ளிவிவரம் உலக குழந்தைகளின் பாதுகாப்பு நிலை எவ்வளவு மோசமடைந்துள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.
