DITWAH அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை துப்பரவு செய்வதில் ஜமாத்தே இஸ்லாமி.
Ditwah அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கம்பளை, கெலிஓயா பகுதிகளை துப்புரவு செய்யும் பணியில் மடவளை Markazul Islah Dahwa And Guidance Trust சீரிய திட்டமிடல்களுடன் பாரிய பங்காற்றியது.
இறையருளால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்களையும், நாட்கூலி அடிப்படையிலான தொண்டர்களையும் பெக்கோ, லொறி போன்றவற்றைக் கொண்டும் இப்பணி வெற்றிகரமாக நடைபெற்றது.
கம்பளையில் அமைந்துள்ள AT THAQWA தஃவா நிலையத்தை மையமாக வைத்து இப்பணி சிறப்பாக முன்னெடுக்கப் பட்டது. AT THAQWA தஃவா நிலைய நிர்வாகிகள் அனேகமானவர்கள் இவ்வனர்தத்தில் நேரடியாகப் பாதிக்கப் பட்டவர்கள்.
எனினும் சமூக பணிக்காக தம்நிலை மறந்து எம்மோடு ஒத்துழைப்பு வழங்கினார்கள். களத்தில் நின்ற அச்சகோதரர்கள் தமது வீடுகளை இறுதியாகவே துப்புரவு செய்தமை அவர்களது சமூகப் பற்றுக்கு சான்றாக அமைந்தது.
ஆயினும் Markazul Islah – மடவளை முன்னெடுத்த துப்புரவுப் பணியின் வீரியத்தையும்விட சிறந்தவொரு வீரியமான பிரிதொரு வீரியமான செயற்பாடாக இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் துப்புரவுப் பணியின் வீரியம் மிகச் சிறப்பாக இருந்தது.
ஒரு ஏகத்துவவாதியாக நின்று துப்புரவு பணிக்காக கம்பளை பகுதியில் களத்தில் பணியாற்றியர்களில் இலங்கை ஜமாத்தே இஸ்லாமிக்கே முதலிடத்தை வழங்க வேண்டும் என்ற உண்மையை கூறிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
மடவளை Markazul Islah வின் ஒருங்கிணைப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏகத்துவவாதிகள் களமிறக்கப் பட்டாலும்; அதைத் தாண்டியும் பல ஊர்களின் ஏகத்துவ மஸ்ஜித்கள், மத்ரஸாக்கள், மத்ரஸாக்களின் பழைய மாணவர்கள் என்று பலரைமும் களத்தில் சந்திக்க முடிந்தது.
எனினும் ஜமாத்தே இஸ்லாமியின் தேசிய ரீதியான ஒருங்கிணைப்பை ஏகத்துவவாதிகளுக்குள் காண முடியவில்லை.
மேலும் மடவளை Markazul Islah ஆரம்பம்முதல் களப்பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் எனும் ரீதியில் இன்னுமொன்றையும் கூறலாம்.
துப்புரவு பணியின் ஆரம்ப கட்டங்கள் மிகமிக சிரமமானவை. இறுதிக் கட்டங்களில் இப்பணியில் எண்ணிடலங்காத பொதுமக்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் களமிறங்கின. (எல்லோருக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக).
இச்சிறப்பான பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் வல்லவன் அல்லாஹ் பரிபூரணமான நற்கூலியை வழங்குவானாக.

