நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளிலிருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில், தமிழ்நாடு காயல்பட்டினத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பங்களிப்புடன், நேற்று மாலை வெல்லம்பிட்டி – வென்னவத்த பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு
மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்கினர்.
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில்
காயல்பட்டினம் மக்களின் இந்த ஒற்றுமை முயற்சி பாராட்டத்தக்கது.
இத்தகைய மனிதநேய செயல்கள், பேரிடர் காலங்களில் மக்களுக்கிடையிலான ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் மீண்டும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

