பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

Date:

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலை (SLISR) மாணவர்கள் மற்றும் பணிக்குழுவினர், 30,000 ரியால் (அமெரிக்க டொலர் 8,000) நிதியுதவியையும், மேலும் 10,000 ரியால் பெறுமதியான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களையும் கையளித்தனர்.

இந்த மனிதாபிமான முயற்சியில் பாடசாலை மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபட்டதன் மூலம், இயற்கைப் பேரழிவின் பாதிப்புக்கு உள்ளானவர்களுடன் தமக்கிருக்கும் அனுதாபத்தையும் ஒத்துணர்வையும் வெளிப்படுத்தினர்.

பல மாணவர்கள் தங்களது தனிப்பட்ட சேமிப்பிலிருந்த நிதிகளை வழங்கி வைத்ததுடன், ஏனைய பலர் அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்கினர்.

கடந்த 17.12.2025 அன்று பாடசாலை அதிபர் மற்றும் பணிக்குழுவினருடன் பல்வேறு தேசியங்களைச் சேர்ந்த பாலர் வகுப்பு முதல் உயர்தர வகுப்பு (Advanced Level) வரையிலான மாணவர்களும் இணைந்து, ரியாதிலுள்ள இலங்கைத் தூதரக வளாகத்திற்கு வருகை தந்து, சவூதி  அரேபியாவுக்கான இலங்கையின் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களிடம் இந்த நன்கொடைகளை கையளித்தனர்.

இந்த பங்களிப்பை வரவேற்ற தூதுவர் அமீர் அஜ்வத், SLISR மாணவர்கள் மேற்கொண்ட இந்த முன்மாதிரிமிக்க மனிதாபிமான செயற்பாட்டை மனப்பூர்வமாக பாராட்டினார்.

Popular

More like this
Related

ஹஜ் பெருநாள் எதிரொலி: மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சி அரசின் புதிய கால்நடை கட்டுப்பாடுகளால் இந்து வியாபாரிகள் கடும் கடன் சுமை!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி...

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு பிணையில் செல்ல அனுமதி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தலங்கம பொலிசாரினால் இன்று...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள்

எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு...

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் இலவச விசா !

குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா...