இம்முறை உயர்தரப் பரீட்சையில் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கு முகம்கொடுக்கவுள்ள மாணவர்களின் இருப்பிடம் மாற்றமடைந்திருந்தால் அது குறித்து உடனடியாக அறியத்தருமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் தமது பாடசாலையின் அதிபருக்கு அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கென தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
0112 784 537 அல்லது 0112 788 616 என்ற இலக்கத்திற்கு அழைத்து பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்க முடியும்.
பரீட்சார்த்திகளின் அனுமதியட்டை அல்லது தேசிய அடையாள அட்டை அனர்த்தம் காரணமாக அழிவடைந்திருந்தால் அது குறித்தும் உடனடி கவனம் செலுத்துமாறு பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
