மின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள் மற்றும் கனிம எண்ணெய் தயாரிப்புகள், எரிவாயு வழங்கல் அல்லது விநியோகம் போன்ற பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களினால், 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (28) திகதியிடப்பட்ட 2468/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகை மூலம் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
