காசாவை மையமாகக் கொண்டு இஸ்ரேல் மேற்கொண்ட கடந்த இரண்டு ஆண்டுகாலப் போரின் போது, ஹமாஸ் அமைப்பின் முக்கிய செய்தித் தொடர்பாளர் அபூ உபைதா (உண்மை பெயர்: ஹுதைஃபா அப்துல்லா அல்-கஹ்லூத்) உயிரிழந்துள்ளதாக, ஹமாஸ் இன்று (30) உறுதிப்படுத்தியுள்ளது.
அபு உபைதாவின் உண்மையான அடையாளம் யாருக்கும் தெரியாது. தனது வீடியோக்களில் எப்போதும் சிவப்பு நிற கெஃபியே அணிந்திருப்பார். கெஃபியே என்பது பாரம்பரிய பாலத்தீன தலைப்பாகை துணி.
2002.ஆம் ஆண்டு, அபு உபைதா அல்-கஸ்ஸாம் படைப் பிரிவின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். அபு உபைதாவின் உண்மையான அடையாளத்தைக் கண்டுபிடிக்க இஸ்ரேல் தொடர்ந்து முயன்று வந்தது.
இஸ்லாமிய MA இலக்கணம் பட்டம் பெற்றவர் அபூ உபைதா. காஸாவின் நலியா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். நலியா கிராமம் 1948ஆம் ஆண்டில் இஸ்ரேலால் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2008,2013 இவரைக் கொன்று விட்டதாக இஸ்ரேல் அறிவித்து இருந்தது.பலமுறை கொலை செய்ய முயற்சித்தும் இஸ்ரேல் தோல்வி அடைந்தது.
இறுதியாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு வீட்டு மீது நடத்திய தாக்குதலில் அபூ உபைதா உள்பட குழந்தைகள் மனைவி என குடும்பத்தார் அனைவரும் கொலை செய்யப்பட்டனர்.
