போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான அபராதங்களைச் செலுத்தக்கூடிய GovPay முறைமையானது தற்போது இலங்கையின் 7 மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முறைமை இதுவரை சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மாத்திரமே நடைமுறைக்கு வரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 33 வகையான போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் GovPay ஊடாகப் பணம் செலுத்த முடியும் என போக்குவரத்துப் பிரிவிற்கும் வீதிப் பாதுகாப்புக்கும் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. ஜி. ஜே. சேனாதீர (W.G.J. Senadheera) தெரிவித்துள்ளார்.
