கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும்

Date:

இலங்கையின் கிழக்கில் உருவாகியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் காரணமாக, கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும்.

 

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

வடக்கு மாகாணத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மற்ற சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

வடமேற்கு மற்றும் மேற்கு மாகாணங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காற்று வடக்கு முதல் வடகிழக்கு திசையிலிருந்து வீசும், காற்றின் வேகம் மணிக்கு (30-40) கி.மீ. வரை இருக்கும். காலியிலிருந்து கொழும்பு, புத்தளம், காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ. வரை அதிகரிக்கலாம்.

காலியிலிருந்து கொழும்பு, புத்தளம், காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். தீவைச் சுற்றியுள்ள மற்ற கடல் பகுதிகள் மிதமானதாக இருக்கும்.

Popular

More like this
Related

நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள்...

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஐ.தே.க. அறிக்கை

சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியின் கொலையைக் கண்டித்து ஐக்கிய...

பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு!

பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை (பிப். 17) பதவியேற்கிறாா். பங்களாதேஷ்...

கொழும்பு-புத்தளம் ரயில் பாதை முழுமையாக திறப்பு!

கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் ரயில் சேவைகள் இன்று (16) அதிகாலை முழுமையாக...