நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை

Date:

கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை தற்போது நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றையதினம் (05) நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திலும் நுவரெலியா, மாத்தளை, பதுளை, பொலன்னறுவை, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

அநுராதபுரம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு, மொணராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின் போதான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வழியாக அம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது.

பேருவளையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என்று அழைக்கப்படும்...

நாடளாவிய ரீதியில் 3 நாள் டெங்கு ஒழிப்பு திட்டம்.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தலைமையில் உள்ளூராட்சி...

‘டிரம்ப் ஒரு கோழை, தைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும்’: டிரம்ப்புக்கு கொலம்பியா அதிபர் சவால்!

டொனால்ட் டிரம்ப் ஒரு கோழை, துணிவிருந்தால் என்னை கைது செய்யட்டும் என...

6ஆம் தர ஆங்கிலப் பாடநூலிலிருந்து சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்

சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட...