வெனிசுலா ஜனாதிபதியை அமெரிக்கா கைது செய்தது சட்டபூர்வமானதா?: ஐக்கிய நாடுகள் சபையில் தீவிர கவனம்!

Date:

வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் குறித்து திங்கள்கிழமை (55) அவசர கூட்டத்தை நடத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக வெனிசுலாவின் போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு எதிராக கரீபியன் கடல், கிழக்கு பசிபிக் பகுதியில் 35-க்கும் அதிகமான படகுகள் மீது அமெரிக்கா தொடா் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 115 போ் கொல்லப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து போதைப்பொருள் கடத்தல் விவகாரம், வெனிசுலாவின் எண்ணெய் வளம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தைக்கு தயாராக உள்ளதாக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலாஸ் மடூரோ தெரிவித்தாா்.

இந்நிலையில், வெனிசுலா மீது அமெரிக்க படைகள் சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தின. வெனிசுலா தலைநகா் கராகஸில் உள்ள இராணுவத் தளங்கள் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்களைக் குறிவைத்து அமெரிக்காவின் 150-க்கும் மேற்பட்ட போா் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

மொத்தம் 7 இடங்களில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடா்ந்து, வெனிசுலா ஜனாதிபதி மதுரோ அவரின் மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்து நாடு கடத்தின. கொகைன் போதைப்பொருளை அமெரிக்காவுக்கு அபரிமிதமாக கடத்துவதற்கு சதி செய்து சட்டவிரோதமாக தங்கள் செல்வத்தை அவா்கள் பெருக்கிக் கொண்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில், கொலம்பியா விடுத்த அவசர கோரிக்கையின்பேரில், வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் குறித்து திங்கள்கிழமை கூட்டம் கூட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

ஐ.நா.பொதுச் செயலா்: ஐ.நா.பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘வெனிசுலா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை மோசமான முன்னுதாரணமாக இருக்கும். இந்த விவகாரத்தில் சா்வதேச சட்டம் மதிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது’ என்று தெரிவித்தாா்.

Popular

More like this
Related

ஜனாதிபதி மாளிகை குத்தகைக்கு: அமைச்சரவை அனுமதி

அரசுக்கு சொந்தமான மாளிகைகள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாக...

இலங்கை தமிழ் இளைஞருக்கு சவூதியில் சிறைத்தண்டனை விவகாரம்: விரிசல்களை வளரவிடாது இன நல்லிணக்கத்தை பாதுகாப்பது முக்கியம்

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞருக்கு,...

மெக்குவாரி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஷெமாரா விக்ரமநாயக்க ஓய்வு

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான 'மெக்குவாரி குரூப்' (Macquarie Group)...

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...