2000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்!

Date:

இலங்கை மத்திய வங்கி அதன் 75 ஆவது ஆண்டு நிறைவைக்கொண்டாடும் வகையில் 2000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது.

மத்திய வங்கியின் கூற்றுப்படி, இந்த 2000 ரூபாய் நாணயத்தாள் பொதுமக்கள் அதன் நம்பகத்தன்மையை எளிதாக சரிபார்க்க உதவும் வகையில் பல பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த தாளை வெளிச்சத்திற்கு மேலே உயர்த்திப் பிடித்தால், வாளினை கொண்ட சிங்கம் முழுமையாக தெளிவாக தெரியும்,மேலும் வெளிச்சத்திற்கு மேலே உயர்த்திப் பிடித்தால், நிறம் மாறும். பாதுகாப்பு நூல் நீல நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாறி, கொழும்பில் உள்ள கடிகார கோபுரத்தினை காட்டுகின்றது.

மேலும் பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்ட ஆறு தொட்டுணரக்கூடிய பட்டைகள் உள்ளன. புற ஊதா ஒளியின் கீழ், ஆண்டு கருப்பொருளில் ஒளிரும் இரட்டை வண்ணங்கள் மற்றும் முன்வானலை தோன்றும், மதிப்பும் தெரியும்.

இதனால் உண்மையான ரூபாய் தாள்களை இயந்திரத்தினால் அடையாளம் காண முடியும், போலி ரூபாய் தாள்களை கண்டுபிடிக்கவும் இந்த அம்சங்களைப் பயன்படுத்துமாறு மத்திய வங்கி பொதுமக்களை வலியுறுத்துகின்றது.

Popular

More like this
Related

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...