அரசாங்கப் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டத்திற்காக இன்று (ஜனவரி 21) முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம்: இன்று (ஜனவரி 21) முதல் பெப்ரவரி 13 ஆம் திகதி வரை நடைபெறும்.
பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் மார்ச் 2 ஆம் திகதி வரை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும்.
அதன் பின்னர் மார்ச் 3 ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை பாடசாலைகள் நடைபெறும்.
