இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மஜக சார்பில் நலத்திட்ட உதவிகள்!

Date:

இந்தியாவின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகம் எங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் (MJK) சார்பில் தேசியக் கொடி ஏற்றி, பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

அதற்கமைய இன்று காலை கட்சியின் தலைமையகத்தில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து, தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் முக்கிய அங்கமாக, “நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம்” என்ற உறுதிமொழி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வெறும் கொண்டாட்டமாக மட்டுமன்றி, சமூக நலனை முன்னிறுத்தி மஜக இந்த நாளைப் பயன்படுத்தியுள்ளது.

இதன்படி தமிழ்நாடு முழுவதும்  பல இடங்களில் மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன, இரத்ததான முகாம்கள் மற்றும் இலவச மருத்துவ முகாம்கள், மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் விநியோகம், ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு விநியோகம், நோயாளிக்கு பழங்கள் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்குதல் என பல்வேறு மனிதாபிமான உதவிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.முகமது நாசர், தலைமை ஒருங்கிணைப்பாளர் J.S.ரிஃபாயி, மாநிலச் செயலாளர் கலைக்குயில் இப்ராஹிம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவின் குடியரசு தினத்தைக் கொண்டாடும் வகையில், தமிழக அரசியல் களத்தில் ஒரு கட்சி இவ்வளவு விரிவான சமூகப் பணிகளை முன்னெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் வரைவுச் சட்டமூலம்’ உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கே – முன்னிலை சோசலிசக் கட்சி சாடல்!

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ளபயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் Protection of the State...

வேளாண் தொழில் நுட்பம் மற்றும் நிலையான உணவு உற்பத்தியில் இலங்கை – கட்டார் கூட்டுறவு விரிவாக்கம்

வேளாண் தொழில்நுட்பம் (Agri-technology), காலநிலைக்கேற்ற விவசாயம் மற்றும் நிலையான உணவு உற்பத்தி...

சவூதி மன்னரிடம் அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு இலங்கை முஸ்லிம் எம்.பிக்கள் கூட்டு வேண்டுகோள்.

சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் எதிர்கொண்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் என்பவருக்கு...

27ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று ஆரம்பமாகிறது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டுக் மண்டபத்தில் 27ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக்...