அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் சாதாரண வீதிகளில் வாகனங்களில் பயணிப்பவர்கள் ஆசனப்பட்டி அணியாவிட்டால் இன்று (26) முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 24ஆம் திகதியுடன் இச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மூன்று மாத கால அவகாசம் முடிவடைந்துள்ளதாகவும் மேற்படி சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சாரதிகள் மற்றும் முன் இருக்கையில் அமரும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இச் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
