சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் இணையும் முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை.

Date:

பிள்ளைகளுக்குச் சிறந்தவற்றை வழங்குவது என்பது வெறும் வார்த்தைகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு யோசனை அல்ல. இது எமது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும்.”

சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் (Global Charter on Children’s Care Reform) இணைவதற்கான உத்தியோகபூர்வ விருப்பத்தை இலங்கை நேற்று (17) கொழும்பு 07, பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் வைத்து வெளிப்படுத்தியது.

இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினரும், நீதித்துறை அமைச்சரும் (லோர்ட் சான்சலர்) பிரதிப் பிரதமருமான உயர் கௌரவ டேவிட் லம்மி அவர்களின் முன்னிலையில், இலங்கை அரசாங்கத்தின் சார்பில், உத்தியோகபூர்வ உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜூம் கலந்துக்கொண்டார் .

இலங்கை நீண்டகாலமாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் பிரகடனத்தில் (UNCRC) ஒரு பங்காளியாக இருந்து வருவதுடன், சர்வதேச சட்டங்களின் கீழ் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

சிறுவர்களுக்கான மாற்றுப் பராமரிப்பு தொடர்பான 2009 ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வழிகாட்டுதல்கள், பெற்றோர் பராமரிப்பு அற்ற சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான 2019 பொதுச் சபை தீர்மானம் (A/RES/74/133), 2022 நிறுவனமயமாக்கலை நீக்குதல் தொடர்பான வழிகாட்டுதல்கள் (CRPD/C/5), 2022 கிகலி(Kigali) பிரகடனம் மற்றும் 2024 சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதலாவது உலகளாவிய அமைச்சர்கள் மாநாடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உலகளாவிய சாசனம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வரை உலகில் 34 நாடுகள் இந்த சாசனத்தை அங்கீகரித்துள்ளன.

தெற்காசிய பிராந்தியத்தில் இதுவரை எந்தவொரு நாடும் இந்த சாசனத்தில் இணையாத நிலையில், அதில் இணையும் முதல் தெற்காசிய நாடாக இலங்கை திகழ்கின்றது.

புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர், எனது தலைமையிலான மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சானது சிறுவர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து பல சுயாதீனமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதற்கமைய, 2026 ஆம் ஆண்டில் முன்பிள்ளைப் பருவத்துடன் தொடர்புடைய துறைகளை பௌதீக ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் அபிவிருத்தி செய்வது முக்கிய நோக்காகக் கருதப்படுகிறது.

இந்த உலகளாவிய திட்டத்தில் இணைவதன் முக்கிய நோக்கம், இலங்கையின் தேசிய சிறுவர் பராமரிப்புக் கொள்கைகளை மேலும் வலுப்படுத்துவதும், சர்வதேச தரத்திற்கு ஏற்ப அவற்றை நடைமுறைப்படுத்துவதும் ஆகும். இது எமது பயணத்தின் மற்றுமொரு வெற்றிகரமான மைல்கல்லாகும்.

யுனிசெப் (UNICEF) மற்றும் இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் 100 மி.மீ வரை மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது!

இலங்கைக்கு தென்கிழக்காக தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த...

கண்டி அனர்த்தப் பகுதிகளைப் பார்வையிட்டார் IMF பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா: அரசாங்கத்தின் துரித நடவடிக்கைக்குப் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தலைமையிலான தூதுக்குழுவினர்,...

ட்ரம்ப்பின் ‘அமைதிக் குழுவில்’ இணைய மெக்சிகோ மறுப்பு: பார்வையாளராக மட்டும் பங்கேற்க முடிவு!

காசா போர் நிறுத்தத்தை மேற்பார்வையிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள...

இலங்கை விமான போக்குவரத்து வரலாற்றில் சாதனை

இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் அதன் வரலாற்றில் ஒரே...