admin
-
யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது!
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையில் 663 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 547 சந்தேகநபர்களும் குற்றவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டிருந்த பட்டியலில் இருந்த 116 சந்தேகநபர்களும் இதில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் 175 கிராமும் 191…
-
ஜெய்சங்கரை சந்தித்த ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ள நிலையில் இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
-
கொழும்பில் இன்று 15 மணித்தியால நீர்வெட்டு!
கொழும்பில் சில பகுதிகளில் இன்றைய தினம் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று(10) மாலை 05:00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 08:00 மணி வரை இந்த நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. அதன்படி,…
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…
-
இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தினத்தையிட்டு ஜம்இய்யா விடுக்கும் செய்தி!
நமது தாய்நாடான இலங்கைத் திருநாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூரும் இந்த முக்கியமான தருணத்தில், சாதி, இனம், மதம் ஆகியவற்றைக் கடந்து நமது சுதந்திரத்திற்குப் பங்காற்றிய அனைத்துத் தரப்புக்களினது தலைவர்களின் தியாகங்களுக்கும் அர்ப்பணிப்புகளுக்கும் முதலில் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தேசப்பற்றுள்ள ஒவ்வொரு குடிமகனும்…
-
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!
நாட்டில் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. மேல்,…
-
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற பிறை விழிப்புணர்வு மாநாடு
வருடாந்த பிறை விழிப்புணர்வு மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (03 ) காலை 8.30 மணி தொடக்கம் மாலை 3:30 மணி வரை நடைபெற்றது. (படங்கள்)
-
Update: கெஹலியவுக்கு விளக்கமறியல்!
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இம்யூனோகுளோபுலின் ஊசி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நேற்று (02) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த பின்னர் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர்…
-
இலங்கை வந்தார் தாய்லாந்து பிரதமர்!
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து பிரதமர், 76வது சுதந்திர விழாவில் கௌரவ அதிதியாகவும் பங்கேற்கவுள்ளார். இந்த விஜயத்தின் போது, தாய்லாந்து…
-
கொழும்பில் குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படை: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு போக்குவரத்து கடமைகளுக்காக சுமார் 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு மற்றும் ஏனைய கடமைகளுக்காக 4,000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட…