admin
-
IMF அனுசரணையுடன் இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா உறுதி!
அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெல்லனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் கூடிய வலுவான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் கலந்துரையாடலில் உறுதி…
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி இன்று அறிவிக்கப்படும்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் திகதியை அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதியை அறிவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (07) தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
-
இலங்கையில் பயன்பாட்டுக்கு வரும் இந்திய ரூபா!
இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இந்தியாவும் இலங்கையும் ஆராய்ந்து வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் த ஹிந்து பத்திரிகை நேற்று (07) செய்தி வௌியிட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய…
-
பாண் இறாத்தல் 100 ரூபாவாக குறையும்: என்.கே.ஜயவர்தன!
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் எனவும், அவற்றை மேலும் அதிகரிக்க எந்த வாய்ப்பும் இல்லை எனவும், குறைந்தபட்சம் பாண் இறாத்தல் 100 ரூபாவாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதற்கு அரசின் ஆதரவை…
-
கொழும்பு வரும் சாரதிகளுக்கான அறிவிப்பு!
குருந்துவத்தை பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள அத்துலதஸ்ஸனாராம விகாரையின் வருடாந்த தேரோட்டம் காரணமாக அப்பகுதியில் உள்ள வீதியை பயன்படுத்துவோர் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். கோவிலின் வருடாந்திர ஊர்வலம் இன்று இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது. ஊர்வலம் பௌத்தாலோக மாவத்தை, கனத்த சுற்றுவட்டம்,…
-
இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல்!
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவில் எதிர்வரும் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் இலங்கையின் நிலைமைகள் மீளாய்வு செய்யப்படவுள்ளது. மனித உரிமை மீறல்கள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், நீதித்துறையின் சுதந்திரம்…
-
அரசியலமைப்புச் சபையின் விசேட கூட்டம் 9 ஆம் திகதி!
தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும் 9ஆம் திகதி மீண்டும் கூடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான சில முக்கிய தீர்மானங்கள் அங்கு எடுக்கப்பட உள்ளதாகவும்…
-
மாணவர்களுக்கு 30 வீத சலுகையில் பயிற்சி புத்தகங்கள் வழங்க தீர்மானம்!
பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களை 30 வீத சலுகையில் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள் அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட பயிற்சிப் புத்தகங்களை சதொச கடைகளின் ஊடாக கொள்வனவு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…
-
பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்படும் அபாயம்!
60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருட காலத்திற்கு பணியமர்த்த பொதுச் சேவை ஆணைக்குழு அனுமதி வழங்காததால் நீண்ட தூர சேவைகள், எரிபொருள் போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில்கள் பல தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வு அளிக்கும்…
-
உக்ரைனின் முக்கிய நகரத்தை கைப்பற்ற ரஷ்யா தீவிர முயற்சி!
உக்ரைன்-ரஷ்யா போர் ஓர் ஆண்டை கடந்தும் முடிவில்லாமல் நீண்டு வருகின்றது. இந்த போரில் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அந்த வரிசையில் கிழக்கு உக்ரைனில் உள்ள பாக்முத் நகரை கைப்பற்ற கடந்த சில மாதங்களாக ரஷ்யா கடுமையாக…