Tuesday, November 24, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. அரசியல்

    ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக அகிலவிராஜ் காரியவசம் நியமனம்!

    ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதியின் நிர்வாக விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

  2. அரசியல்

    காலிமுகத்திடல் அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைதுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் முகமாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

    கொழும்பு காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஜனநாயகப் போராட்டங்களை மேற்கொண்டு வரும் போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், கைதுகள் போன்ற அச்சுறுத்தல்களைக் கண்டித்தும், கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரியதுமான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்…

  3. உள்ளூர்

    மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கான அறிவிப்பு!

    மேல் மாகாணத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்துடன் காலாவதியாகும் வாகன வருவாய் உரிமங்களுக்கு இன்று ஜூலை 29ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. எவ்வாறாயினும், தற்போதைய எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு,…

  4. ஆசியா

    பாலியல் நோக்கத்துடனான வன்முறைகள் அவுஸ்திரேலியாவில் அதிகரிப்பு!

    அவுஸ்திரேலியாவில் பாலியல் நோக்கத்துடனான தாக்குதல்கள் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளன என அவுஸ்திரேலிய புள்ளிவிபர பணியகம் தெரிவித்துள்ளது. 2021 இல் 31,000 பேர் பாலியல் நோக்கதுடனான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் என பதிவாகியுள்ளது என புள்ளிவிபர பணியகம் தெரிவித்துள்ளது. ஒரு வருடகாலப்பகுதியில் இத்தகைய குற்றங்கள் 13 வீதம் அதிகரித்துள்ளன,…

  5. அரசியல்

    பாராளுமன்றம் ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது!

    பாராளுமன்றம் நேற்று (28) நள்ளிரவு முதல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் திகதி வரையில் பாராளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார்.

  6. அரசியல்

    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் கலந்துரையாடல்!

    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு ஏற்ப செயற்படல் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நிதி அமைச்சில் நேற்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்…

  7. அரசியல்

    அவசரகால சட்ட வர்த்தமானியை வலுவிழக்க செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

    பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கான வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் நேற்று அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன்…

  8. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

    நாட்டின் தென் அரைப்பாகத்தில்மேகமூட்டமான வானம்காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும்என…

  9. அரசியல்

    அவசரகால சட்டம் வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம்: ஜி.எல். பீரிஸ்!

    தற்போதைய சூழ்நிலையில் அவசரகால சட்டம் அவசியமில்லை என்பதாலேயே அதற்கு எதிராக வாக்களித்திருந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் சட்டத்துறை பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவசரகால சட்டமென்பது நாட்டுக்கு அவசியமானது எனவும்,…

  10. அரசியல்

    நாடாளுமன்றில் புதிய நியமனங்களை வழங்கிய பிரதமர்!

    பாராளுமன்ற ஆளும் கட்சியின் பிரதி முதற்கோலாசான்கள் மற்றும் உதவி முதற்கோலாசான்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து நேற்று (27) வழங்கப்பட்டன. அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) சாகர காரியவசம் மற்றும் ஜயந்த கெட்டகொட ஆகியோர் பிரதி…