admin
-
இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம்!
இலங்கை மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் இன்று (08) நள்ளிரவு முதல் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. பாதகமான வகையில் மின்சார சட்டம் திருத்தப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இவ்வாறு பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, அந்த சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர குறிப்பிட்டார். 1996ஆம்…
-
குறைமதிப்பீட்டு பிரேரணை மீதான விவாதம் இன்று!
அத்தியாவசியமான பொதுச் சேவைகளை இடையூறு இன்றிப் பேணுவதற்குத் தேவையான நிதியைத் திரட்டும் நோக்கில் பிரதமரினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குறைமதிப்பீட்டு பிரேரணை மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது. 695 பில்லியன் ரூபாய் பெறுமதியான இந்தக் கூடுதல் மதிப்பீடு நேற்று பொது நிதி தொடர்பான குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது.…
-
இந்தியாவின் “செந்தமிழ்ச்சுடர் கலைஞர் விருது” பெற்றார் மாவடிப்பள்ளியைச் சேர்ந்த யூ.எல்.யூ. மஜினா!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த நாளான ஜுன் 03ஆம் திகதியை முன்னிட்டு, திண்டுக்கல் பசுமை வாசல் பவுண்டேஷன், தமிழ்நாடு பனை மரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், சேலம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா அறக்கட்டளை மற்றும் சேலம் அக்ஷ்ய் டிரஸ்ட் ஆகிய…
-
சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் தீப்பரவல்!
வவுனியா - கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. இதன்போது அங்கு புதிதாக வைக்கப்பட்டிருந்த சூரிய ஒளி மின் உற்பத்தி உபகரணங்கள் தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா…
-
பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்: வேன் கட்டணங்கள் அதிகரிப்பு!
இவ்வருடத்திற்கான இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. இதன்படி, அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. முதலாம் தவணையின் முதலாம் கட்டத்தை நிறைவுறுத்தி கடந்த மாதம் 19ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை…
-
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும்…
-
இஸ்லாமும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும்: சர்வதேச சுற்றுச் சூழல் தினம் இன்று!
ஜூன் மாதம் 05 ஆம் திகதி [World Environment Day] -சர்வதேச சுற்றுச் சூழல் பாதுகாப்பு தினமாகும். மனித வாழ்வு இயந்திரமயமான பின்னர் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது தினம் தினம் கேள்விக் குறியாகிக் கொண்டே செல்கின்றது. குறிப்பாக 18 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்…
-
நபிகளாரின் வரலாற்றை எழுதிய மலேசியாவைச் சேர்ந்த அஸ்மா ஹாஜி அவர்கள் இறைவனிடம் மீண்டார்!
நபிகளாரின் வரலாற்றை எழுதிய மங்கை, சகோதரி அஸ்மா ஹாஜி அப்துல் லதீஃப் இறைவனிடம் மீண்டார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன். அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து அருள்புரிவானாக! அவருடைய நல்லறங்களை ஏற்றுக் கொள்வானாக! அவருக்கு சுவனத்தின் உயர்ந்த மாளிகைகளில் சேர்த்துக் கொள்வானாக! ஆமீன்.…
-
குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுகிறது: வைத்தியர் தீபால் பெரேரா!
கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குழந்தைகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 20% மான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது. குழந்தைகளுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமையே இதற்கு முக்கியக் காரணம் என வைத்தியசாலையின் குழந்தைகள் நல சிறப்பு வைத்தியர் தீபால்…
-
உணவுப்பயிர்களை பயிரிட உடனடி வேலைத்திட்டம்: ஜனாதிபதி தீவிரம்!
பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான, எனினும் பயன்படுத்தப்படாத நிலங்களைக் கண்டறிந்து, உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். பெருந்தோட்டத்துறை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி…