Monday, November 23, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

    பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத்தளபதிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அதற்கமைய, குறித்த இருவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சியை பேணத் தவறியமைக்கான காரணம் குறித்து விளக்குவதற்காக குறித்த இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…

  2. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

    நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு…

  3. உள்ளூர்

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பணிப்புறக்கணிப்பு போராட்டம்: தொழிற்சங்கங்கள் தெரிவிப்பு!

    காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் நியூஸ் நவ் செய்தி தளத்திற்கு கருத்து தெரிவிக்கையில், நேற்று நாடு…

  4. உள்ளூர்

    நாளை காலை 7 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்றது!

    பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆம் சரத்தின் கீழ் நாடு முழுவதும் நாளை காலை 7 மணிவரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை விடுத்து இதனைக் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துமூல அனுமதியின்றி பொது வீதிகள்,…

  5. உள்ளூர்

    அலிசப்ரி ரஹீம் எம்.பியின் வீட்டின் மீது தாக்குதல்!

    முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வீட்டின் மீது இனந்தெரியாத குழுக்களால் இன்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தளம் வான் வீதியில் உள்ள குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகபூர்வ வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது , பாராளுமன்ற…

  6. உள்ளூர்

    ஜனநாயக ரீதியாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருவோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது!

    தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை தொடர்பாக தமது எதிர்ப்பை முன்வைத்து ஜனநாயக ரீதியில் காலி முகத்திடலிலும் அலரி மாளிகைக்கு முன்னிலும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டவர்கள் மீது இன்று தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமையானது மிகவும் கவலையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகத்திற்கு எதிரான இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை நாம்…

  7. உள்ளூர்

    பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் கையளித்துள்ளார்!

    பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இன்று காலை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட உரை... அரசியல் இலாபங்களுக்காக நாட்டை அராஜகமாக்க விரும்பவில்லை என அவர் இன்று (09) தனது விசேட…

  8. உள்ளூர்

    தேசிய வைத்தியசாலை ஊழியர்கள், உயர் நீதி மன்ற ஊழியர்கள் மற்றும் தபால் ஊழியர்கள் மறு அறிவித்தல் வரை பணிப்புறக்கணிப்பு!

    தேசிய வைத்தியசாலை ஊழியர்கள், உயர் நீதி மன்ற ஊழியர்கள் மற்றும் தபால் ஊழியர்கள் மறு அறிவித்தல் வரை பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர். காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமாக தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வாறு வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகிறது.

  9. உள்ளூர்

    கலவர பூமியாக மாறிய GOTA GO GAMA: கண்ணீர் புகை, நீர் தாரை பிரயோகம்!

    கடந்த ஒரு மாத காலமாக அமைதியான முறையில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஆர்ப்பாட்டமானது கலவர பூமியாக மாறியது. காலிமுகத்திடலில் தற்போது இடம்பெற்றுவரும் மோதல் சம்பவமானது உச்சநிலையை எட்டியுள்ளது. அரசுக்கு ஆதரவானவர்கள் தற்போது காலிமுகத்திடல் பகுதிக்குள் பிரவேசித்து அங்கு அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது தாக்குதல்…

  10. உள்ளூர்

    இலங்கைக்கு விடிவு காலம் பிறக்க இன்னும் 2 வருடங்கள் தேவை: நிதி, நீதி அமைச்சர் அலி சப்ரி!

    இலங்கை அதன் பொருளாதார நெருக்கடிகளை, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தாங்க வேண்டியிருக்கும் என்று நிதி அமைச்சர் அலி சப்ரி எச்சரித்துள்ளார். பல மாதங்களாக நிலவும் மின்சாரத்தடை, உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு ஆகியவை நாடு முழுவதும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.…