Monday, November 23, 2026

Author

Newsnow Admin

NewsNow staff · செய்திப் பிரிவு

admin

3278 articles
  1. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

    மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்தப் பகுதிகளின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. வட…

  2. உள்ளூர்

    பேராசிரியர் எம்.ரி புர்கான் மறைவு!

    இலங்கையில் கணக்காய்வு கல்வியை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஓருவராக கருதப்படுபவரும் கொழும்பு சாஹிராக் கல்லுரி முன்னாள் அதிபரும், முன்னாள் ஆளுநர் சபைத்தலைவருமான பேராசிரியர் எம்.ரி புர்கான் காலமானார். பலப்பிடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சாஹிரா கல்லூரியில் கற்று இறுதிவரை அதன் வளர்ச்சிக்காக அரிய பல பங்களிப்புக்களை…

  3. உள்ளூர்

    காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நாளையுடன் ஒரு மாதம் பூர்த்தி!

    நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு கோரி, காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நாளையுடன் ஒரு மாதம் பூர்த்தியாகின்றது. இதற்கமைய நாளை முதல் ஆரம்பமாகும் வாரத்தை, போராட்ட வாரமாக அறிவிப்பதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் குறிப்பிட்டுள்ளது. காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு…

  4. உள்ளூர்

    தனியார் பேருந்து போக்குவரத்து சேவை முழுமையாக பாதிப்பு!

    எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பேருந்து போக்குவரத்து சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நான்கு நாட்களுக்கு தேவையான டீசல் மாத்திரமே கையிருப்பில் உள்ளது என அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். தூரபிரதேச போக்குவரத்தினை இன்றும் நாளையும் மாத்திரமே…

  5. உள்ளூர்

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உள்ளிட்ட 11 கட்சிகளுக்கும், சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் இடையில் இன்று கலந்துரையாடல்!

    அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன இன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் கலந்துரையாடலை நடத்தவுள்ளன. தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனை…

  6. உள்ளூர்

    நாட்டில் எதிர்வரும் நாட்களில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: உதய கம்மன்பில!

    நாட்டில் அடுத்த மூன்று மாதங்களில் உணவு மற்றும் எரிபொருள் கையிருப்பு முடிந்து விடும் ஆபத்து இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது, கமத்தொழில், மருத்துவச் சேவை, கைத்தொழில் உற்பத்தி…

  7. உள்ளூர்

    கடலுக்கு செல்ல வேண்டாம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் உயர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, அடுத்த சில மணி நேரங்களில் சூறாவளியாக உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இன்று பிற்பகல் வேளையில், கிழக்கு, மத்திய வங்காள விரிகுடாவில் இது சூறாவளியாக உருவாகும் எனவும்…

  8. உள்ளூர்

    மே 01ம் திகதி மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட எம்.பிகளின் ஏற்பாட்டில் மேதின நிகழ்வு!

    எதிர்வரும் மே 01ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கியதாக மட்டக்களப்பு கல்லடி மீனிசை சிறுவர் பூங்கா வெளியில் மே தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்விற்கு அனைத்து மக்களையும் அழைக்கும் விதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு, அம்பாறை…

  9. உள்ளூர்

    திரிபோஷ உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தம்!

    நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதன்படி வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷா இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதல் சில மாதங்களில் மட்டுமே தமக்கு திரிபோஷ கிடைத்ததாக…

  10. உள்ளூர்

    ஏர்டெல்லின் (Airtel) 2G & 3G வலையமைப்பை இடைநிறுத்த அனுமதி!

    Airtel 3G மொபைல் வலையமைப்பை 24.06.2022 திகதி முதல் நிறுத்துவதற்கு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தனது அனுமதியை பார்தி ஏர்டெல் லங்கா (பிரைவேட்) லிமிடெட்(ஏர்டெல்) நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. 3G வலையமைப்பு நிறுத்தப்பட்ட பின் 2G & 3G செயல்படுத்தப்பட்ட மொபைல் போன்களை மட்டுமே…