காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நாளையுடன் ஒரு மாதம் பூர்த்தி!

Date:

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு கோரி, காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நாளையுடன் ஒரு மாதம் பூர்த்தியாகின்றது.

இதற்கமைய நாளை முதல் ஆரம்பமாகும் வாரத்தை, போராட்ட வாரமாக அறிவிப்பதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் குறிப்பிட்டுள்ளது.

காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் இன்று 30ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

சுமார் ஒரு மாதமாக முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்தில் இதுவரையில் முறுகல் நிலை எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை.

கடந்த மாதம் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் சீரற்ற வானிலை நிலவிய போதிலும் இன்று வரை தொடர்கின்றது.

இளைஞர் யுவதிகள், கலைஞர்கள், தொழிற்சங்கத்தினர், விசேட தேவையுடையவர்கள், சிவில் அமைப்பினர் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்துக்கு ஆதரவை வழங்கி வருகின்றனர்.

அத்துடன் இன, மத பேதகங்கள் இன்றி கடந்த சித்திரைப் புத்தாண்டு மற்றும் ரமழான் போன்ற பண்டிகைகள் போராட்டம் இடம்பெறும் பகுதியில் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

செப்டம்பர் முதல் 13 நாட்களில் 2,100-க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள்

இந்த ஆண்டில் இதுவர 97,637 டெங்கு நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழையுடன் கூடிய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...