சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

Date:

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் 7ஆவது மீளாய்வுக்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று (10) இலங்கையை வந்தடைந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் இவான் பபாஜோர்ஜியோ தலைமையில் இந்தக் குழு இலங்கை வந்துள்ளது.

இலங்கை வரலாற்றில் எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக, 2023 மார்ச் 23ஆம் திகதி முதல் 2027 மார்ச் 19ஆம் திகதி வரையான நான்கு வருட காலப்பகுதியில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்திருந்தது.

இதன்படி, குறித்த நிதியை 8 தவணைகளாக இலங்கைக்கு வழங்க திட்டமிடப்பட்டது.

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்க உள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள், மத்திய வங்கி அதிகாரிகள் மற்றும் ஏனைய முக்கிய தரப்பினரை சந்தித்து அவர்கள் கலந்துரையாடல்களை நடத்த உள்ளனர்.

இதன்போது, இலங்கையின் அண்மைக்கால பொருளாதார முன்னேற்றங்கள், நிதி மறுசீரமைப்புகளின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

7ஆவது மீளாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர், இலங்கைக்கு வழங்கப்படவுள்ள சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 8ஆவது கடன் தவணையை விடுவிப்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை பரிசீலனை செய்யவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...

ஆளும் கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஷூரா சபை சந்திப்பு

ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பின் பேரில், தேசிய...