உய்குர் முஸ்லிம்களை இனப் படுகொலை செய்யும் சீனா:பிரிட்டிஷ் சட்டத்தரணி நியமித்த பொது விசாரணை மன்றம் குற்றச்சாட்டு! -லத்தீப் பாரூக்

Date:

சீனாவின் மிகப் பெரிய மாநிலமான வடமேற்கில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாநிலமான சின்ஜியாங் 1949ல் சீன பெரு நிலப் பரப்புக்குள் உள்வாங்கப்படும் வரை தனக்கே உரிய சிறப்பான பண்புகளைக் கொண்ட ஒரு மாநிலமாக இருந்தது.

சீனப் பட்டுப் பாதையில் அமைந்துள்ள சின்ஜியாங் சீனாவின் நிலப்பரப்பில் ஆறில் ஒருபங்கை கொண்டது. பாகிஸ்தான், கஸக்கிஸ்தான், கிரிகிஸ்தான் என்பன உள்ளடங்களாக எட்டு நாடுகளை அது எல்லைகளாகவும் கொண்டுள்ளது. எண்ணெய் வளம் மிக்கது. நாட்டின் மிகப் பெரிய நிலக்கரி வளம், இயற்கை வாயு என்பனவும் இங்கு ஏராளமாக உள்ளன.

இங்கு 11 மில்லியன் உய்குர் இளத்தவர்கள் வாழுகின்றனர். இவர்கள் இன ரீதியாக துருக்கி வம்சாவழியினர். பத்தாம் நூற்றாண்டு காலப் பகுதியில் மத்தியஆசியாவில் இருந்து இங்கு வந்து குடியேறி இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ்ந்து வருபவர்கள்.

இந்த மாநிலத்தின் மூலோபாயமுக்கியத்துவம், இயற்கைவளங்கள் என்பன காரணமாக சீனாவுக்குஅதன் மீதானகட்டுப்பாடு அவசியமாகின்றது. இதனால் சீனா ஹான்ஸ் பிரிவு சீனர்களை இங்கு குடியேற்றியது. இது சீனாவின் ஆதிக்கம் மிக்க இனப்பிரிவாகும்.

இந்தப் பிராந்தியத்தின் அரச வேலை வாய்ப்புக்கள் அனைத்தும் இவர்களுக்கு வழங்கப்பட்டதோடு, இயற்கை வளங்களைகட்டுப்படுத்தும் அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தமது கலாசாரம், இன மற்றும் சமயரீதியான தனித்துவம் என்பன இந்த ஹான்ஸ் பிரிவு சீனர்களால் பாதிக்கப்படுகின்றது என்பதே உய்குர் இனத்தவர்களின் நிலைப்பாடாகும். இந்தப் பிரதேசம் கிழக்கு துருக்கி எனவும் குறிப்பிடப்படுவதுண்டு.

இந்தப் பிராந்தியம் 1949க்கு முன் இருந்ததுபோல் சுதந்திரமான ஒரு பிராந்தியமாக இருக்கவேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் வாதமாகும். ‘நாங்கள் உய்குர்வாசிகள். அதுதான் எமது தனித்துவ அடையாளம்,அதை தொடர்ந்து பேண வேண்டும்’என்பதுதான் உய்குர் மக்களின் கோரிக்கை.

சீனாவின் இணைப்புப் பாதை, புதியபட்டுப்பாதை என்பன போன்ற ஐரோப்பா மற்றும் ஆசியாவுடனான பாரிய அபிவிருத்தித் திட்டங்களில் சின்ஜியாங் மூலோபாயம் மிக்க ஒரு பிரதேசமாகும்.

சீனா தனது அபிவிருத்தி திட்டத்துக்கான ஒரு முன்னேற்பாடாக இங்கு பிரிவினைவாத செயற்பாடுகள் எதுவும் தலை தூக்கிவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனம் செலுத்திவருகின்றது.

இந்த இலக்கை அடிப்படையாகக் கொண்டு சீனா கடந்தபலவருடங்களாக உய்குர் மக்களை தொடர்ந்து நசுக்கி வருகின்றது. அவர்கள் தமது சமயத்தை பின்பற்றவிடாமல் தடுக்கப்படுகின்றனர். தமது இனத்தை அடையாளப்படுத்தும் ஆடையை அவர்கள் அணிய முடியாது. அவர்களின் மொழியைக் கூட பேசமுடியாது.

2017 முதல் சின்ஜியாங்கில் வாழும் உய்குர் இன முஸ்லிம் ஆண்களும் பெண்களும் தொடராக கைது செய்யப்பட்டுவருகின்றனர். அவர்கள் வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சின்ஜியாங்கைச் சேர்ந்த சுமார் இரண்டு மில்லியன் உய்குர் இனத்தவர்களும் ஏனைய சிறுபான்மையினரும் இவ்வாறு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்குஅவர்களின் சமய உரிமைகள் மறுக்கப்பட்டு மார்க்ஸிஸ கொள்கைகளைப் படிக்குமாறு வற்புறுத்தப்படுகின்றனர். தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர்.

இதேவேளை பிரிட்டனின் புகழ்பெற்ற மனித உரிமை சட்டத்தரணி சேர் ஜெப்ரிநைஸ் நியமித்த ஒருபொது விசாரணை மன்றம் சீனா உய்குர் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்துள்ளதாகவும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை அவர்கள் மீது புரிந்துள்ளதாகவும் தனது முடிவை வெளியிட்டுள்ளது.

உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான மற்றும் துருக்கிய இனம் சார்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளுக்கான பொறுப்புக் கூறலை வலியுறுத்தும் வகையில் இந்த விசாரணை மன்றம் நியமிக்கப்பட்டது.

உய்குர் முஸ்லிம்களை இலக்குவைத்து பலவந்தமான பிறப்புக் கட்டுப்பாடு,கட்டாய கருத்தடை கொள்கைகள் என்பன அமுல் செய்யப்படுகின்றன. இந்த இனத்தின் சந்ததி பரவலை தடுக்கும் நோக்கில் இவை செய்யப்படுகின்றன என்று இந்த விசாரணை மன்றத்துக்கு தலைமை தாங்கிய ஜெப்ரி நைஸ் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணிகள்,கல்விமான்கள் மற்றும் வர்த்தகமுக்கியஸ்தர்கள் ஒன்பது பேர் அடங்கிய இந்த விசாரணை மன்றம் 63 பக்க அறிக்கை ஒன்றை தனது தீர்ப்பாக வெளியிட்டுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட சான்றுகளின் படி சீனாசின்ஜியாங் மாநிலத்தில் உய்குர் இனத்தவர்கள் வாழும் முக்கிய பகுதிகளில் கட்டாயமான கருத்தடைமற்றும் பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகளை அமுல் செய்துள்ளமை சந்தேகத்துக்கு இடமின்றி நிருபணமாகி உள்ளது.

இதன் மூலம் அங்கு இன ஒழிப்புபடுகொலை இடம்பெற்றுள்ளது என்பதே எமது தீர்ப்பாகும் என்றுஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி ஜிங் பிங் மற்றும் சிரேஷ்ட உயர்மட்ட அதிகாரிகள் பலரும் இதற்குபொறுப்பேற்க வேண்டியவர்கள் என்றுஅந்தஅறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்ஜியாங்கில் சீனா மனித குலத்துக்கு எதிரான பல குற்றங்களையும் புரிந்தள்ளது. கற்பழிப்பு, பலவந்த கருக்கலைப்பு, நிர்ப்பந்த கருத்தடை, சித்திரவதை,விசாரணைகள் இன்றி சிறையில் அடைத்தல், துன்புறுத்தல்,நாடு கடத்தல், கட்டாயமாக காணாமல் ஆக்கப்படல், நாடு கடத்தல் என்பன இவற்றில் அடங்கும் என அந்த தீர்ப்பு அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உய்குரில் பாதிக்கப்பட்டவர்கள்,உய்குர் நிலைமைகள் சம்பந்தமாக நிபுணத்துவம் கொண்ட ஆய்வாளர்கள் எனபலர் இந்த மன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளனர்.

தாங்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும்,பாலியல் வன்முறைகளுக்கு ஆளானதாகவும்,சித்திரவதைகளுக்கு உற்பட்டதாகவும்,உணவு மற்றும் உறக்கம் இன்றி தடுத்து வைக்கப்பட்டதாகவும்,தமது குடும்பம் மற்றும் பிள்ளைகளிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டதாவும் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சாட்சியம் அளித்துள்ளனர்.

மக்கள் மீது நெருக்குதல் பிரயோகித்தல்,தடுத்துவைத்தல் மற்றும் உலகில் இருந்து அவர்களை ஒதுக்கிவைத்தல் என்பன மிகத் தீவிரமாக இடம்பெறுகின்ற நிலையில், இவற்றை எல்லாம் மீறி மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் இருந்து சீனாவுக்கு கிடைத்துவரும் ஆதரவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் என்பன பற்றி சீனா மற்றும் அமெரிக்கா பற்றி ஆய்வு நடத்தும் கிஸின்ஜர் நிறுவனத்தின் வுட்ரோ வில்ஸன் மத்திய நிலையம் புதிதாக வெளியிட்டுள்ள’கிறேட் வோல் ஒப் ஸ்ட்ரீட்’என்ற அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

‘உய்குர் முஸ்லிம்களைதான் நடத்தும் விதம் பற்றி முஸ்லிம் மக்கள் மற்றும் நாடுகள் என்ன நினைக்கின்றன என்பதில் சீனா ஒருவகை அச்சம் கொண்டுள்ளது.

மேலும் அந்த நாடுகளின் அரசுகள் மீது செல்வாக்கு செலுத்துவதிலும் சீனா பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது’என்று வாஷிங்டனில் செயற்படும் கம்யூனிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு மன்றம் என்ற இலாப நோக்கற்ற அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் சென்ஸ் தெரிவித்துள்ளார்.

பத்தி எழுத்தாளர் அனா ஸ்கெட்ச்கே தெரிவித்துள்ள கருத்தில் சீனா அதன் எல்லைக்குள் மட்டும் உய்குர் இனத்தவர்களை கொடுமை படுத்தவில்லை. வெளிநாடுகளிலும் அவர்களை அது வேட்டை ஆடுகின்றது. சவூதி அரேபியா,எகிப்து, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் ஆதரவோடு இது இடம் பெறுகின்றது.

முஸ்லிம் சிறுபான்மையினர் தொடர்பான தனது நடவடிக்கைகள் விமர்சிக்கப்படக் கூடாது என்பதில் சீனா அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

சீனாவின் எல்லைகளுக்கு அப்பாலும் சிறிய குழுக்களாகக் கூட உய்குர் முஸ்லிம்களின் செயற்பாடுகள் இருக்கக் கூடாது என்பதில் சீனாமிகவும் தெளிவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நான் சந்தித்த சில உயகுர்மக்களின் கூற்றின் படி எகிப்து சுற்றிவளைப்பில் சீன பொலிஸார் துபாய் அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் ஒருஅங்கமாகஎகிப்தில் இருந்து வெளியேறி அமீரகம் வர இருந் உய்குர் மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இன்னெரு பத்தி எழுத்தாளரான ஜரடின் ரோட் குறிப்பிட்டுள்ளார்.

எகிப்து,சவூதி அரேபியாமற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என்பனவற்றில் மேலைத்தேச நாசகார சக்திகளின் ஆதரவோடுபதவியில் இருக்கும் அரசுகளின் வெட்கக் கேடானநிலை இதுதான்.

முஸ்லிம் உலகில் இருந்து தனது நடவடிக்கைகளுக்கு பாரியஅளவில் கண்டனம் எதுவும் வெளிவராமல் சீனா இதுவரைதடுத்துவந்துள்ளது.

Popular

More like this
Related

இம்ரான் கானுக்கு பிணை: இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பு

நில ஊழல் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு...

‘அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம் ஒன்றை...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்த ‘Expo 2024’ கண்காட்சியும் கருத்தரங்கும்

பாகிஸ்தான் அரசின் உயர்கல்வி ஆணைக்குழுவினால் வருடாந்தம் வழங்கப்படும் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில்...

ஒன்லைன் சட்டத்தின் கீழ் முதலாவது தீர்ப்பு: இராணுவத் தளபதிக்கெதிராக அவதூறு பரப்பிய யூடியூபுக்கு தடைவிதிப்பு

நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (Online Safety Act)மூலம் முதலாவது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை...