admin
-
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் விசேட அறிவிப்பு!
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. களனி ஆற்றின் நீர் மட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அம்பத்தளை பிரதேசத்தில் மணல் மேடு அமைக்கப்பட்டுள்ளதாக…
-
2030-க்குள் புகைப்பழக்கத்தை ஒழிக்க இங்கிலாந்தின் புதிய திட்டம்!
இங்கிலாந்து நாட்டில் புகைப்பிடித்தல் பழக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக ஆண்டுக்கு சுமார் 5 இலட்சம் பேர் புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தனிநபருக்கு மட்டுமின்றி அரசாங்கத்துக்கும் சுகாதார செலவுகள் அதிகரித்து வருகிறது. எனவே இதனை குறைக்க…
-
இலங்கையில் ‘சினோபெக்’ ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு!
சீன எண்ணெய் நிறுவனமான சினோபெக், செப். 20 ஆம் திகதி இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை விட குறைந்த விலைக்கு எரிபொருளை…
-
சிறுவர்களை விளையாட்டுப் பயிற்சிகளில் ஊக்குவிப்பதன் மூலம் தகாத செயல்பாடுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்: இல்ஹாம் மரிக்கார்!
கொழும்பு விஸ்டம் முன்பள்ளி விளையாட்டுப் போட்டிகள் கடந்த (09.08.2023) அன்று விமர்சையாக நடைப்பெற்றது . இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக அமேசான் கல்லூரியின் முகாமையாளரும் பேராதனை பல்கலைக்கழக உளவியல் துறை விரிவுரையாளருமான இல்ஹாம் மரிக்கார் கலந்து சிறப்பித்தார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக குழந்தைகள் உரிமை…
-
தஜிகிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.2 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நேற்று அதிகாலை 2.56 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும்…
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
-
2ஆம் தவணை பாடசாலை விடுமுறைக்கான திகதி அறிவிப்பு!
அனைத்து அரச மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட பாசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறைக்கான திகதிகள் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இரண்டாம் தவணை கல்வி விடுமுறை ஒகஸ்ட் 17 ஆம் திகதி முடிவடைந்து ஒகஸ்ட் 28 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கொழும்பு பிரதான ரயில் சேவையில் தாமதம்!
பிரதான ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. கம்பஹா - புலுகஹகொட பகுதிக்கு இடையில் ரம்புக்கனையிலிருந்து பாணந்துறை வரை இயங்கும் அதிவேக ரயிலின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே…
-
போலந்திற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது!
பெலாரஸில் இருந்து போலந்திற்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த இலங்கையர்களுடன் பல நாடுகளின் பிரஜைகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சோமாலியா, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இலங்கை பிரஜைகள் உட்பட 160 பேர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனவரி முதல் இதுவரை…
-
பிரதமர் சீனாவுக்கு விஜயம்!
பிரதமர் தினேஷ் குணவர்தன நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று(14) மாலை சீனாவிற்கு பயணமானதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ‘பொது அபிவிருத்திக்கான ஒருமைப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு’ எனும் தொனிப்பொருளின் கீழ் 7 ஆவது சீன – தெற்காசிய எக்ஸ்போ கண்காட்சி மற்றும் 27…