Wednesday, November 25, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21007 articles
  1. உள்ளூர்

    கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பயணத் தடை!

    முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன வெளிநாட்டுப் பயணத் தடை விதித்துள்ளார். 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் காரணமாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

  2. உலகம்

    துனிசியாவில் அதிரடித் தீர்ப்பு: 85 வயது ராஷித் அல்-கன்னூச்சிக்கு ஆயுள் தண்டனை!

    துனிசியாவின் முன்னணி எதிர்க்கட்சியான 'என்னஹ்தா' (Ennahda) இயக்கத்தின் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான ரஷீத் கன்னூச்சிக்கு (Rached Ghannouchi) நீதிமன்றம் அதிரடியாக ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 84 வயதான அவருக்கு ஆயுள் தண்டனையுடன் சேர்த்து மேலும் 30 ஆண்டுகள் கூடுதல் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது…

  3. உள்ளூர்

    சர்வதேச நாணய நிதியத்தின் 695 மில்லியன் டொலர் நிதியுதவி இலங்கைக்குக் கிடைத்தது!

    சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட 5 ஆம் மற்றும் 6 ஆம் தவணைகளுக்கான 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி நாட்டுக்குக் கிடைத்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை அடுத்தே இந்த இரு தவணைகளுக்கான…

  4. உள்ளூர்

    மேல் மாகாணம் உள்ளிட்ட பல இடங்களில் 100 மி.மீ. மழை

    மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100…

  5. உள்ளூர்

    கோட்டாபயவுக்கு இணையவழியில் சாட்சியமளிக்க யாழ். நீதிமன்றம் அனுமதி!

    யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் நிகழ் நிலையில் சாட்சியம் அளிக்க முன்னாள் ஜனாதிபதியும் அப்போதைய பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு மனித உரிமைகள் தினமான டிசம்பர்…

  6. உள்ளூர்

    இலங்கையில் நபரொருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதமொன்றுக்கு ரூ.17,117 தேவைப்படுகிறது: புள்ளிவிபரத் திணைக்களம்.

    இலங்கையில் நபரொருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாதமொன்றுக்கு குறைந்தபட்சம் 17,117 ரூபா தேவைப்படுவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்  வெளியிட்டுள்ள 2026 ஏப்ரல் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டு (Official Poverty Line) புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இத்தரவுகளின்படி, மாதாந்த அடிப்படைத் தேவைகளைப்…

  7. உள்ளூர்

    3 விளையாட்டு சங்கங்களின் பதிவு தற்காலிகமாக ரத்து!

    இலங்கை கைப்பந்து , கெரம் மற்றும் ஹொகி ஆகிய தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் குமார கமகே தெரிவித்துள்ளார். அதிவிசேட வர்த்தமானி மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சங்கங்களின் நிர்வாகம், கட்டுப்பாடு மற்றும் வேறு…

  8. உள்ளூர்

    சவூதி அரேபியாவுக்கான ஹஜ் பயணத்தின் போது எழுந்த விசாரணைகள் குறித்து அஷ்ஷேக் அர்கம் நூரமித் விடுத்துள்ள விசேட அறிக்கை!

    சவூதி அரேபியாவிற்கு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றிருந்த போது ஏற்பட்ட சம்பவங்கள் மற்றும் விசாரணைகள் குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ்ஷேக் அர்கம் நூரமித் அவர்கள் தெளிவுபடுத்தும் வகையில் அறிக்கையொன்றை  வெளியிட்டுள்ளார். அவரது…

  9. உள்ளூர்

    14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; கைது செய்யப்பட்டவர் மௌலவி அல்ல: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இறக்காமம் கிளை விளக்கம்!

    அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் ஒரு 'மௌலவி' என ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பிரசாரம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இறக்காமம் பகுதியில் சிறுமி ஒருவர்…

  10. உள்ளூர்

    டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

    இந்த ஆண்டில் இதுவரை இலங்கை முழுவதும் மொத்தம் 33,572 டெங்கு பாதிப்புகளும் 19 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் துஷானி தாபரேவின் கூற்றுப்படி,மே மாதத்தில் மட்டும் 8,321 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் கொழும்பு, கம்பஹா மற்றும்…